Video: இப்படியா வீசுவீங்க?... மோசமாகத் தாக்கிய பந்து மைதானத்திலேயே 'சுருண்டு' விழுந்த வீரர்... அடுத்து நடந்த ட்விஸ்ட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்ய, பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்களாக படிக்கல், ஆரோன் பிஞ்ச் இருவரும் களமிறங்கினர். 2-வது ஓவரை பட்டின்சன் வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தை பிஞ்ச் எதிர்கொண்டார்.

Video: இப்படியா வீசுவீங்க?... மோசமாகத் தாக்கிய பந்து மைதானத்திலேயே 'சுருண்டு' விழுந்த வீரர்... அடுத்து நடந்த ட்விஸ்ட்!

சரியாக அந்த பந்து அவரின் இரண்டு கால்களுக்கு இடையில் சென்று படக்கூடாத இடத்தில் பட்டது. இதனால் வலியில் துடித்த பிஞ்ச் சுருண்டு கீழே விழுந்தார். இதைப்பார்த்த மும்பை அணியின் வீரர்கள் என்ன செய்வது?என தெரியாமல் திகைத்து பின்னர் ஓடி வந்தனர்.

IPL 2020: Pattinson's steaming delivery leaves Finch on the floor

எனினும் வலியை பொறுத்துக்கொண்டு தொடர்ந்து ஆடிய பிஞ்ச் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக திகழ்ந்தார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்படியா பந்து வீசுவீங்க? என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

மற்ற செய்திகள்