கேட்டை 'இழுத்து' மூடுங்க...எல்லாரும் 'வீட்ல' பாத்துக்கட்டும் ... உண்மையிலேயே 'இப்டித்தான்' நடக்க போகுதா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வருகின்ற 29-ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன. சுமார் 8 மாதங்களுக்குப் பின் தோனி கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்குவதால், ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 43 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் பலருக்கு தொற்று இருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவி வருகிறது. கூட்டமாக கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கேட்டை 'இழுத்து' மூடுங்க...எல்லாரும் 'வீட்ல' பாத்துக்கட்டும் ... உண்மையிலேயே 'இப்டித்தான்' நடக்க போகுதா?

இதனால் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஐபிஎல் போட்டிகளில் சிக்கல் எதுவும் ஏற்படுமா? என்ற கவலை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுதவிர மூடப்பட்ட மைதானத்தில் போட்டிகள் நடைபெற்று ரசிகர்கள் அதனை டிவியில் பார்க்கக்கூடிய நிலைமை ஏற்படுமா? என்றும் பெருத்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்ட தேதிகளில் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மறுபுறம் இதுகுறித்து பிசிசிஐ தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடைபெறாது என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஒவ்வொரு அணிகளுக்கும் தனிப்பட்ட முறையில் ரசிகர்கள் உள்ளனர். தங்கள் பேவரைட் அணிக்கு ரசிகர்கள் சப்போர்ட் செய்வதை அந்தந்த அணிகள் மிகவும் விரும்புகின்றன. மேலும் ஸ்பான்சர்ஷிப் ரீதியிலும் எதிரொலிக்க கூடிய விஷயம் என்பதால், ரசிகர்கள் இன்றி போட்டி நடத்துவதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால் வீரர்களுக்கு சுகாதார ரீதியிலான அறிவுரை வழங்கப்படும். ரசிகர்களுடனான செல்பி, கை குலுக்குவது, பெரிய கூட்டங்களில் கலந்து கொள்வது போன்றவற்றை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கப்படும் என்றார்.

எனினும் ஐபிஎல் போட்டிகள் தள்ளிப்போகுமா? இல்லை திட்டமிட்ட தேதியில் நடத்தப்படுமா? ஒருவேளை போட்டிகள் நடைபெற்றால் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா? போன்ற கேள்விகளுக்கான விடை இன்னும் சரியாக தெரியவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை பிசிசிஐ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.