"என்ன நடந்துச்சுனு தெரியாம... பாவம், அவர திட்டாதீங்க...!" - 'சப்போர்ட்டுக்கு வந்த கேப்டனையும்'... 'வறுத்தெடுத்த ரசிகர்கள்!!!'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.
மும்பைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தோல்விக்கு பல காரணங்கள் இருந்தபோதும், கேப்டன் தினேஷ் கார்த்திக் மீது தற்போது விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதே நேரம் 15.5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் குறித்தும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அதற்கு காரணம் அவர் அந்தப் போட்டியில் 3 ஓவர்களில் 49 ரன்கள் கொடுத்திருந்ததே ஆகும்.
இந்நிலையில் போட்டிக்குப்பின் இதுகுறித்து பேசியுள்ள கேப்டன் தினேஷ் கார்த்திக், "அந்தப் போட்டியின்போது குவாரன்டைனில் இருந்து சில மணி நேரங்களுக்கு முன்பே வெளியே வந்த பாட் கம்மின்ஸை விமர்சனம் செய்வது நியாயமில்லை. உள்ளூர் நேரப்படி 6 மணிக்கு துவங்கும் போட்டிக்கு 3.34 மணிக்கு தான் பாட் கம்மின்ஸ் ஆடலாம் என அனுமதி கிடைத்தது. அதனால் கம்மின்ஸ் பயிற்சி இன்றி தான் விளையாடினார்" எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து தற்போது ஏன் பயிற்சியே இல்லாத வீரருக்கு அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் எனவும், ஒரு போட்டிக்கு மட்டும் அவருக்கு ஓய்வு அளித்து நல்ல பயிற்சி கிடைத்த பின் ஆட வைத்திருக்கலாமே எனவும் கேள்வி எழுந்துள்ளது. இது கேப்டன்சியில் தினேஷ் கார்த்திக் செய்த தவறுதான் என அவர்மீது விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.
மற்ற செய்திகள்