அவரே இப்படி பார்ம் 'அவுட்ல' இருக்காரே... இது எங்க போய் முடிய போகுதோ?... கவலையில் தோனி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியிடம் கப்பை சென்னை அணி பறிகொடுத்தது. இதனால் நடப்பு ஆண்டு தொடரை சென்னை அணி கைப்பற்றும் என அனைவரும் நினைத்திருக்க மாறாக மும்பைக்கு எதிராக வெற்றியுடன் தொடங்கிய சென்னை அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியைத் தழுவி அதிர்ச்சி அளித்துள்ளது.

அவரே இப்படி பார்ம் 'அவுட்ல' இருக்காரே... இது எங்க போய் முடிய போகுதோ?... கவலையில் தோனி!

இது சென்னை ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐபிஎல் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த நிலையில் சென்னை அணி வீரர்களின் மோசமான பார்ம் கேப்டன் தோனியை கவலை கொள்ள வைத்துள்ளதாம். குறிப்பாக சிறந்த பீல்டர், ஆல்ரவுண்டர் என புகழப்படும் ஜடேஜா பார்ம் அவுட் ஆகி இருக்கும் விஷயம் தோனியை கவலைப்பட வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

IPL 2020: Jadeja's poor bowling performance continued

3 போட்டிகளிலும் 40 ரன்களுக்கு மேல் வாரிவழங்கி இருக்கிறார். அது போதாதென பேட்டிங்கிலும் இவரது ஆட்டம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ரெய்னா அணியில் இல்லாத நேரத்தில் பொறுப்பாக ஆடுவார் என பார்த்தால் இப்படி சுத்தமாக பார்ம் அவுட் ஆகி இருக்கிறாரே என ரசிகர்களும் கவலை கொள்ள ஆரம்பித்து இருக்கின்றனர்.

IPL 2020: Jadeja's poor bowling performance continued

அதிக தொகை கொடுத்து எடுக்கப்பட்ட சாவ்லா ஒவ்வொரு போட்டியிலும் ரன்களை வாரிவழங்குவதால் ஜடேஜா பக்கம் பெரும்பான்மை ரசிகர்களின் கவனம் இன்னும் திரும்பவில்லை. ஆனாலும் கூட ரெய்னாவை சென்னை அணி திரும்ப கூப்பிட வேண்டும் என சென்னை ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்