ஒருவேளை அந்த ‘மேஜிக்’ நடந்தா சிஎஸ்கே ‘ப்ளே ஆஃப்’ போக வாய்ப்பு இருக்கு.. என்னென்னு தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் சென்னை அணி ப்ளே ஆஃப் செல்ல சில வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வருட ஐபிஎல் சீசனில் இதுவரை 10 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எளிதாக வெற்றி பெற வேண்டிய பல போட்டிகளில் மோசமான ஆட்டத்தால் சென்னை தோல்வியை தழுவியது. இந்தநிலையில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே மிக மோசமான தோல்வியை தழுவியது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை சென்னை அணி இழந்துள்ளது. இதுவரை விளையாடிய அனைத்து சீசனிலும் ப்ளே ஆஃப் சுற்றுவரை சிஎஸ்கே சென்றுள்ளது. அதனால் இந்த வருடமும் எப்படியாவது ப்ளே ஆஃப் சென்றுவிடாதா என சிஎஸ்கே ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்துள்ளனர்.
இந்த நிலையில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல சென்னைக்கு இன்னமும் சில வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதில் இனி விளையாட உள்ள 4 போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றே ஆகவேண்டும். அதிலும் அனைத்து போட்டிகளிலும் கண்டிப்பாக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். தற்போது அணியில் உள்ள வீரர்களை வைத்துக்கொண்டு இது சாத்தியாமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் புள்ளிப்பட்டியலில் உள்ள முதல் 3 இடங்களில் உள்ள டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் இனி தாங்கள் விளையாட உள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அதேபோல் அடுத்தடுத்த இடங்களில் உள்ள கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத், பஞ்சாப் ஆகிய அணிகள் 12 புள்ளிகளுக்கு மேல் அதிகரிக்காமல் இருக்க வேண்டும். இதுபோன்ற மேஜிக் நடந்தால் மட்டுமே சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்