6 வருஷத்துக்கு முன்னாடியே போடப்பட்ட விதை !... 'சென்னை'யை காலி செய்து ரசிகர்களை கடுப்பாக்கிய இளம்வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து சென்னை கேப்டன் தோனிக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் தோனி மீதான தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு அந்த அணியின் இளம்வீரர் ராகுல் தேவாட்டியா பெரிதும் உதவினார். 37 ரன்களை விட்டுக்கொடுத்து ஷேன் வாட்சன், சாம் கரண், ருத்ராஜ் என சென்னையின் 3 விக்கெட்டுகளை காலி செய்தார். ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு இவரது சிறப்பான பந்துவீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது.
குறிப்பாக தனது வெற்றியை இரு காதுகளையும் மூடிக்கொண்டு அவர் கொண்டாடிய விதம் அனைவரையும் யார் இந்த பையன் என தேட வைத்துள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 27 வயது ராகுல் 2014-ம் ஆண்டு ராஜஸ்தான் அணியால் தான் ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். அப்போது இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
Guess the dialogue!! 😂#CSKvsRR #ChennaiSuperKings #RahulTewatia #Cricket #IPL2020 pic.twitter.com/k0Jc77UfSc
— Behindwoods (@behindwoods) September 23, 2020
தொடர்ந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்ட ராகுல் கவுதம் கம்பீர், உத்தப்பா விக்கெட்டுகளை வீழ்த்தி கவனிக்க வைத்தார். 2018-ம் ஆண்டு டெல்லி அணியால் வாங்கப்பட்ட இவர் தற்போது மீண்டும் தாயகத்துக்கே திரும்பி இருக்கிறார். 6 வருடங்களுக்கு முன் ராஜஸ்தான் அணி இவர்மீது வைத்த நம்பிக்கையை தற்போது ராகுல் நனவாக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்