IPL 2020: நாங்க 'வந்துட்டோம்னு' சொல்லு... வெளியானது 'ஐபிஎல்' அட்டவணை... 'மொத' மேட்ச் யாருக்குன்னு 'பாருங்க' மக்களே!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் அட்டவணை சற்றுமுன் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்றும் பெங்களூர் அணிகள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருக்கின்றன. அதே நேரம் சென்னை, மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் ஆகிய அணிகள் இதுகுறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும் கிரிக்கெட் ரசிகர்கள் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து, சமூக வலைதளங்களில் ஐபிஎல் பற்றி தொடர்ந்து ட்வீட் செய்து வருகின்றனர்.
Chinnaswamy, here we come! Block your calendars! #PlayBold #NewDecadeNewRCB pic.twitter.com/nfXvSzQGAb
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 15, 2020
Up & away, we are coming your way! Mark your calendars. #PlayBold #NewDecadeNewRCB pic.twitter.com/72elgDkGUI
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 15, 2020
மேலும் முதல் மேட்ச் எந்த இரு அணிகளுக்கு இடையில் நடைபெறும் என்று ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகப்படியாக இருந்தது. அந்த மில்லியன் டாலர் கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. ஆமாம். முதல் மேட்சில் மும்பையை எதிர்த்து விளையாடப்போவது நம்ம சென்னை அணிதான். கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி கோப்பையை இழந்தது. இதனால் சென்னை ரசிகர்கள் மிகுந்த வருத்தத்துடன் இருந்தனர்.
🚨 ATTENTION #OrangeArmy🚨
The moment you've all been waiting for.
Mark your 🗓 for #IPL2020! pic.twitter.com/Z11JPXDvwu
— SunRisers Hyderabad (@SunRisers) February 15, 2020
அந்த வருத்தங்களை போக்கும் விதமாக முதல் போட்டி மும்பை-சென்னை இரு அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது. இதனால் இதில் வெற்றி பெற்று மும்பையை பழிதீர்த்து வெற்றிக்கணக்குடன் சென்னை அணி தன்னுடைய கணக்கை துவங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர். அதேபோல சுமார் 8 மாதங்களுக்கு பின் தோனி களமிறங்கும் போட்டி என்பதாலும் இந்த மேட்ச் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#IPL2020 schedule ❤😍 pic.twitter.com/bOsEvypclR
— VIVO IPL 2020 (@IPLCricket) February 15, 2020
நாங்க திரும்ப வந்துட்டோம்னு சொல்லு!