'3-வது முறையா கோப்பையை வெல்லணும்'... 'சைலண்ட்டாக வந்த புதிய ஃபீல்டிங் கோச்'... 'முன்னாள் விக்கெட் கீப்பர் நியமினம்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் 2020 சீசனில் 3-வது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் கொல்கத்தா அணி முன்னாள் விக்கெட் கீப்பரை நியமனம் செய்துள்ளது.

'3-வது முறையா கோப்பையை வெல்லணும்'... 'சைலண்ட்டாக வந்த புதிய ஃபீல்டிங் கோச்'... 'முன்னாள் விக்கெட் கீப்பர் நியமினம்'!

ஐபிஎல் 2020 சீசன் வரும் மார்ச் 29-ம் தேதி தொடங்க உள்ளது. ஒரு மாதமே உள்ள நிலையில், கோப்பையை வெல்லும் முனைப்பில் எல்லா அணிகளும் மாற்றங்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஜேம்ஸ் ஃபாஸ்டர், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பீல்டிங் கோச்சாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுபாதீப் கோஷ் இதற்கு முன் கே.கே.ஆர். அணியின் கோச்சாக இருந்தார். இந்நிலையில் தற்போது ஜேம்ஸ் ஃபாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இங்கிலாந்து அணிக்காக ஐந்து டி20, 11 ஒரு நாள் மற்றும் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். நியூசிலாந்தை சேர்ந்த பிரெண்டன் மெக்கல்லம் தலைமை பயிற்சியாளராகவும், கைல் மில்ஸ் பந்து வீச்சு பயிற்சியாளராகவும் கே.கே.ஆர் அணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL, KKR, JAMES FOSTER, IPL 2020, FIELDING COACH