MIvsDC: 'தெறிக்க விடு.. சிதற விடு'... சும்மா பிரிச்சு மேஞ்சுட்டாங்க.. வீரர்களை பாராட்டி பறக்கும் மீம்ஸ்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

துபாயில் நடந்த,  ஐபிஎல் 2020 முதல் பிளே ஆப் போட்டியில், டெல்லி அணி இன்னொரு வாய்ப்புக்காக காத்திருக்க, மும்பை இந்தியன்ஸ் அணி அபாரமாகவே வெற்றி பெற்றது.

MIvsDC: 'தெறிக்க விடு.. சிதற விடு'... சும்மா பிரிச்சு மேஞ்சுட்டாங்க.. வீரர்களை பாராட்டி பறக்கும் மீம்ஸ்!

முதலில் பேட் செய்த மும்பை அணி, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா காட்டடியில் 200/5 என்ற மிகப்பெரிய எண்ணிக்கையை எட்டியது. தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியை, ‘தண்டர்’ போல்ட் மற்றும் பூம்பூம் பும்ரா இருவரு, தங்களது அபாரமான பந்து வீச்சில் பவர் ப்ளேயிலேயே வீழ்த்தினர்.

வெற்றி பெற 201 ரன்கள் தேவை என்ற நிலையில் இறங்கிய டெல்லி அணி ரன் எடுக்காமலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது. பிரிதிவ் ஷாவுக்கு அருமையான இடது கை பந்து வீச்சாளர் போல்ட் பந்து வீச, அவர் பேசாமல் எட்ஜ் செய்து வெளியேறினார்.  இதே ஓவரில் இருமுறை ரஹானேவுக்கும் குறுக்காக செல்லுமாறு பந்தை வீசி விட்டு ஒரு பந்தை உள்ளே கொண்டு வர முயற்சித்து, பிளம்ப் எல்.பி. ஆனார்.

 

ஷிகர் தவணின் பாதங்களைப் பெயர்க்கும் கூர்மையான யார்க்கரை வீசிய பும்ராவால், பவுல்டு ஆனது. ஷ்ரேயஸ் அய்யர் திறமையாக போல்ட்டை எதிர்கொண்டு ஒரு லாங் ஆன் பவுண்டரி, கவரில் ஒரு பவுண்டரி என 3 பவுண்டரிகளுடன் 12 ரன்களில் இருந்த போது, பூம் பூம் பும்ரா வீசிய வைடு லெந்த் பந்து நேராக கவரில் ரோஹித்திடம் கேட்ச் கொடுக்க, அவரும் வெளியேறினார்.

 

8 ஓவர்களில் 41/5 என்று முடிந்து விட்டது டெல்லி. அக்சர் படேல் 33 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 42 ரன்கள் எடுத்து பொலார்டிடம் வீழ்ந்தார். 143/8 என்று மும்பையிடம் சுருண்டது டெல்லி.

4 ஒவர் 1 மெய்டன் 14 ரன்கள் கொடுத்து, 4 விக்கெட் வீழ்த்திய பும்ராவும், இதே போல் அதிரடியாக பந்துவீசிய போல்டும் டாப் ஆர்டருக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மற்ற செய்திகள்