‘எந்த டீம் கிட்ட எவ்வளவு ஏலத்தொகை இருக்கு?’.. ‘இன்னும் எத்தனை பேரை எடுக்க முடியும்?’.. ‘முழுவிவரம் உள்ளே’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம்  நடைபெறவுள்ள நிலையில் 8 அணிகளும் தங்கள் வீரர்கள் பலரை விடுவித்துள்ளன.

‘எந்த டீம் கிட்ட எவ்வளவு ஏலத்தொகை இருக்கு?’.. ‘இன்னும் எத்தனை பேரை எடுக்க முடியும்?’.. ‘முழுவிவரம் உள்ளே’..

ஐபிஎல் 2020 கிரிக்கெட் தொடருக்கான ஏலத்திற்கு முன்பாக வீரர்களை விடுவித்துள்ளதில் அதிகபட்சமாக ஆர்சிபி அணி 12 வீரர்களையும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் அணிகள் தலா 11 வீரர்களையும், மும்பை இந்தியன்ஸ் அணி 10 வீரர்களையும் விடுவித்துள்ளன. அதற்கு அடுத்ததாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி 9 வீரர்களையும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 7 வீரர்களையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 வீரர்களையும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 வீரர்களையும் தங்கள் அணிகளிலிருந்து விடுவித்துள்ளன.

இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் நடைபெற உள்ள ஏலத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் கைவைசம் உள்ள தொகை ரூ.14.60 கோடி, 2 அயல் நாட்டு வீரர்கள் உட்பட  மொத்தமாக 5 வீரர்களை ஏலம் எடுக்கலாம். டெல்லி கேப்பிடல்ஸிடம் உள்ள தொகை ரூ.27.85 கோடி, 5 அயல்நாட்டு வீரர்கள் உட்பட 11 வீரர்களை ஏலம் எடுக்க முடியும். அதிகபட்சத் தொகையைக் கொண்டுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் உள்ளது ரூ.42.70 கோடி, 4 அயல்நாட்டு வீரர்கள் உட்பட மொத்தமாக 9 வீரர்களை ஏலம் எடுக்கலாம். அதற்கு அடுத்ததாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் உள்ள தொகை ரூ.35.65 கோடி,  4 அயல்நாட்டு வீரர்கள் உட்பட 11 வீரர்களை எடுக்க முடியும்.

மும்பை இந்தியன்ஸ் அணியிடம் கைவைசம் உள்ள தொகை ரூ. 13.05 கோடி,  2 அயல்நாட்டு வீரர்கள் உட்பட மொத்தமாக 7 வீரர்களை ஏலம் எடுக்கலாம். ராஜஸ்தான் ராயல்ஸிடம் உள்ள தொகை ரூ.28.90 கோடி, 4 அயல்நாட்டு வீரர்கள் உட்பட 11 வீரர்களை எடுக்க முடியும். ஆர்சிபியிடம் உள்ள தொகை ரூ.27.90 கோடி,  6 அயல்நாட்டு வீரர்கள் உட்பட மொத்தமாக 12 வீரர்களை ஏலம் எடுக்கலாம். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் உள்ள தொகை ரூ.17 கோடி, 2 அயல்நாட்டு வீரர்கள் உட்பட 7 வீரர்களை எடுக்க முடியும்.