அந்த வலியும், கோபமும் இன்னும் நெஞ்சுல இருக்கு... 'வெறித்தன' ஆட்டத்தால் விமர்சனங்களுக்கு நெத்தியடி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅபுதாபியில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து. தொடர்ந்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடி வருகிறது.
18 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு ரன்கள் எடுத்துள்ளது. சென்னை அணிக்கு வாட்சன், முரளி விஜய் நல்ல தொடக்கம் அளிக்கவில்லை. இதனால் அந்த அணி அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் 3-வதாக களமிறங்கிய அம்பாதி ராயுடு வெறித்தனமாக ஆடி 71 ரன்களை குவித்தார்.
அவரது விக்கெட்டை எடுக்க மும்பை அணி படாதபாடு பட்டது. கடைசியாக ராகுல் சாஹர் யாரையும் நம்பாமல் தானே பவுலிங் செய்து, கேட்சையும் பிடித்து அவரை வெளியேற்றினார். இன்றைய ஆட்டத்தில் 71 ரன்கள் குவித்ததன் வழியாக ஐபிஎல் தொடரில் முதல் அரை சதம் அடித்த வீரர் என்னும் பெருமை ராயுடுக்கு கிடைத்துள்ளது.
ராயுடு...! ராயுடு....!
சின்சியரான ஓரே பிளேயர் நீதான்...!
I am so proud of you ராயுடு...!#IPL2020#CSKvsMI pic.twitter.com/lweqEraQAl
— 💛stalin💛 (@stalin_germany2) September 19, 2020
#MIvCSK: WICKET! Rayudu ct & b Chahar 71 - Chennai 121-3#IPL2020Updates #CSKvsMI #LiveStreaming #Livescore #Dream11IPL #Dhoni #MIvsCSK pic.twitter.com/HAXXUJqsmw
— InsideSport (@InsideSportIND) September 19, 2020
மற்ற செய்திகள்