‘17 பந்தில் அரைசதம்’.. ‘தனிஒருவனாக கொல்கத்தாவை கதறவிட்ட ஹர்திக்’.. கொண்டாடும் நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஹர்திக் பாண்ட்யா தனிஒருவனாக போராடியும் கொல்கத்தாவிடம் மும்பை தோல்வியை தழுவியது.

‘17 பந்தில் அரைசதம்’.. ‘தனிஒருவனாக கொல்கத்தாவை கதறவிட்ட ஹர்திக்’.. கொண்டாடும் நெட்டிசன்கள்!

ஐபிஎல் டி20 லீக்கின் 47 -வது போட்டி இன்று(28.04.2019) கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் எடுத்தது. இதில் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய சுபமன் கில் மற்றும் கிறிஸ் லின் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். இதில் சுபமன் கில் 76 ரன்களும், கிறிஸ் லின் 54 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து களமிறங்கிய ரஸல் ஆரம்பத்தில் நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தார். பின்னர் கடைசியில் தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடி 40 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார்.

இதனைத் தொடர்ந்து 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் மும்பை அணி விளையாடியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் ரோஹித் ஷர்மா களமிறங்கினர். டி காக் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகினார். இதனை அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 91 ரன்கள் விளாசினார். இதில் 17 பந்தில் அரைசதம் அடித்து அதிரடி காட்டினார். மொத்தமாக 9 சிக்ஸர்கள், 6 பவுண்ட்ரிகள் விளாசியுள்ளார். ஆனாலும் 20 ஓவர்களின் முடிவில் 198 ரன்கள் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியைத் தழுவியது.

IPL, IPL2019, HARDIKPANDYA, ONEFAMILY, KKRHAITAIYAAR, KKRVMI