‘சிக்ஸர்களை பறக்கவிட்ட மிஸ்டர் 360’.. வலுவான நிலையில் ஆர்சிபி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஏபி டிவில்லியர்ஸ் அதிரடியான ஆட்டத்தால் 171 ரன்களை பெங்களூரு அணி எடுத்துள்ளது.

‘சிக்ஸர்களை பறக்கவிட்ட மிஸ்டர் 360’.. வலுவான நிலையில் ஆர்சிபி!

ஐபிஎல் டி20 லீக்கின் 31 -வது போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 171 ரன்களை எடுத்தது. இதில் கேப்டன் விராட் கோலி 8 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் மொயின் அலி கூட்டணி அதிடியாக விளையாட ஆரம்பித்தது. இதில் ஏபி டிவில்லியர்ஸ் 51 பந்துகளில் 75 ரன்களும், மொயின் அலி 32 பந்துகளில் 50 ரன்களும் அடித்து அசத்தினர்.

இதனைத் தொடர்ந்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடி வருகிறது.

IPL, IPL2019, RCBVSMI, VIRATKOHLI, ABDEVILLIERS, PLAYBOLD, ONEFAMILY