"எப்படியாச்சும் இத 'திரும்ப' நடத்துங்க.." இன்சமாம் உல் ஹக் வைத்த 'கோரிக்கை'.. "நடந்தா சும்மா அனல் பறக்குமே!!"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி தான், தற்போது அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்திலும் உள்ளது.

"எப்படியாச்சும் இத 'திரும்ப' நடத்துங்க.." இன்சமாம் உல் ஹக் வைத்த 'கோரிக்கை'.. "நடந்தா சும்மா அனல் பறக்குமே!!"

முதல் டெஸ்ட் கோப்பை என்பதால், பலம் வாய்ந்த இரு அணிகள் மோதவுள்ள நிலையில், எந்த அணி கோப்பையைக் கைப்பற்றி அசத்தும் என்ற எதிர்பார்ப்புகளும், கணிப்புகளும் அதிகம் வலம் வந்த வண்ணம் உள்ளன. இந்த போட்டியைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், இந்திய அணி மோதவுள்ளது.

இதன் பிறகு, ஐபிஎல் போட்டிகளும், அதனைத் தொடர்ந்து டி 20 உலக கோப்பை போட்டிகளும் நடைபெறவுள்ளது. இந்திய அணி வீரர்களுக்கு அடுத்தடுத்து போட்டிகள் உள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான இன்சமாம் உல் ஹக் (Inzamam Ul Haq), முக்கிய கோரிக்கை ஒன்றை தற்போது வைத்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டிகள் நடத்த வேண்டும் என கூறிய இன்சமாம் உல் ஹக், 'ஆஷஸ் தொடரை விட, ரசிகர்கள் அதிகம் விரும்பும் போட்டியாக, இந்தியா - பாகிஸ்தான் தொடர் உள்ளது. அந்த போட்டியின் ஒவ்வொரு தருணத்தையும் ரசித்து பார்ப்பார்கள். வீரர்கள் மற்றும் ஆட்டத்தின் மேம்பாட்டிற்காக, ஆசிய தொடர் மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான இரு தரப்பு தொடர்களும் நடைபெற வேண்டும்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதினால், அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும். அது மட்டுமில்லாமல், போட்டியின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளும் வீரர்கள், அதற்கேற்ப முழு திறமையுடன் தங்களது ஆட்டத்தையும் வெளிப்படுத்துவார்கள். இதனால், இது போன்ற போட்டிகள், மிகவும் முக்கியமானதாகும்' என தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக, இரு அணிகளும் மோதாமல் இருந்து வரும் நிலையில், அடுத்த சில மாதங்களில், இரு அணிகளுக்கும் போட்டிகள் உள்ளதால், அடுத்த ஆண்டிற்கு பிறகு வேண்டுமானால், இந்தியா - பாகிஸ்தான் தொடர்கள் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்