‘இந்திய அணி குறித்த சர்ச்சைகளுக்கு..’ இறுதியாக விளக்கம் அளித்துள்ள விராட் கோலி..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துள்ள விராட் கோலி இந்திய அணி குறித்த சர்ச்சைகளுக்கு இறுதியாக விளக்கம் அளித்துள்ளார்.

‘இந்திய அணி குறித்த சர்ச்சைகளுக்கு..’ இறுதியாக விளக்கம் அளித்துள்ள விராட் கோலி..

உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு விராட் கோலிக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, இந்திய அணிக்குள் வீரர்கள் இரண்டு கோஷ்டியாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது. ஆனால் இந்திய அணி அடுத்து விளையாடவுள்ள தொடருக்கு தற்போது கோலியே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி, ரோஹித் ஷர்மாவுடன் கருத்துவேறுபாடு என்ற செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுகுறித்துப் பேசியுள்ள அவர், “இதுபோன்ற பொய்யான செய்திகள் வெளியாகும்போது ஒரு வீரராகவும், அணியாகவும் குழப்பம் ஏற்படுகிறது. இது நம்பமுடியாததாக உள்ளது. அணிக்குள் இதுபோன்ற பிரச்சனைகள் இருந்தால் எப்படி எங்களால் சீராக விளையாடி வர முடியும்? 7வது இடத்திலிருந்து முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளோம். அணியில் சகோதரத்துவமும், நட்பும் இல்லையென்றால் இந்த உயரத்தை அடைந்திருக்க முடியாது.

நான் ஒரு நபர் பற்றி பாதுகாப்பாக உணரவில்லை என்றால் அது என் முகத்திலேயே தெரிந்துவிடும். என்னுடைய நடத்தையிலேயே அதைப் புரிந்து கொள்ள முடியும். நான் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ரோஹித்தைப் பாராட்டியுள்ளேன். ஏனென்றால் அவர் அந்த அளவுக்கு ஒரு சிறந்த வீரர்” எனக் கூறியுள்ளார்.

 

 

 

 

TEAMINDIA, INDVSWI, VIRATKOHLI, PRESSCONFERENCE