இலங்கைக்கு எதிரான கடைசி ‘டி20’ போட்டியில்... ‘மோசமான’ சாதனையைப் பதிவு செய்த ‘இந்திய’ வீரர்!...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலங்கைக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. ஆனால் அதே வேளையில் இதன்மூலம் அவர் மோசமான சாதனை ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
சஞ்சு சாம்சன் கடந்த 2015ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டி20 போட்டியில் அறிமுகமானார். அதன் பிறகு 5 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் அவர் 2வது சர்வதேச போட்டியில் விளையாடியுள்ளார். அவருடைய முதல் 2 போட்டிகளுக்கு இடையே 73 டி20 சர்வதேசப் போட்டிகளை அவர் இழந்துள்ளார். இந்தியாவிலேயே இவர்தான் முதல் 2 போட்டிகளுக்கு இடையே இவ்வளவு இடைவெளி கொண்ட வீரராக உள்ளார். இதற்கு முன்னதாக உமேஷ் யாதவ் தன்னுடைய முதல் 2 போட்டிகளுக்கு இடையே 65 டி20 போட்டிகளை இழந்துள்ளார். இந்தப் போட்டியின் மூலம் உமேஷ் யாதவ் சாதனையை முறியடித்துள்ளார் சஞ்சு சாம்சன்.
உலக அளவில் இங்கிலாந்தின் ஜோ டென்லி 79 டி20 போட்டிகளை தன்னுடைய முதல் 2 டி20 போட்டிகளுக்கிடையே இழந்துள்ளார். அவருக்கு அடுத்த படியாக லியாம் பிளங்கெட் 74 போட்டிகளுடன் உள்ளார். தற்போது அந்த வரிசையில் 3வது இடத்தை இந்திய வீரர் சஞ்சு சாம்சன் பிடித்துள்ளார். மேலும் இந்தப் போட்டியில் முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து ஆச்சரியப்படுத்திய சஞ்சு சாம்சன் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.