'ஹிட்மேன்' கிட்ட மோதுறதே வேலையா போச்சு.. ஒரே போட்டியில் 2 வேர்ல்டு 'ரெக்கார்டுகள்' உடைப்பு!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து,149 ரன்களைக் குவித்தது.தொடர்ந்து இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி கோலியின் அதிரடியால் 3 விக்கெட்டுகளை இழந்து 19 ஓவரில் 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நேற்று இந்த போட்டியில் இந்திய அணியில் இருந்து கோலியும்,தென் ஆப்பிரிக்க அணியில் இருந்து மில்லரும் தலா ஒரு சூப்பர் 'கேட்ச்' பிடித்து தெறிக்க விட்டனர். கேப்டனாக போட்டியில் வெற்றி பெற்றதுடன் நேற்று சத்தமில்லாமல் இரண்டு சாதனைகளையும் 'கிங்' கோலி படைத்திருக்கிறார்.
டி20 போட்டியில் அதிக ரன்களைக் குவித்த வீரர்,அதிக அரைசதங்கள் அடித்தவர் என இரண்டு சாதனைகளை ரோஹித் வைத்து இருந்தார்.(இதில் அதிக அரை சதங்கள் அடித்தவர் பட்டியலில் முதலிடத்தை கோலியுடன், ரோஹித் இதுநாள்வரை பகிர்ந்து கொண்டிருந்தார்).நேற்று ஒரே போட்டியில் இந்த இரண்டு சாதனைகளையும் கோலி தன் வசப்படுத்திக் கொண்டுள்ளார்.தற்போது ரோஹித்(2,434) ரன்களுடன் இரண்டாம் இடத்திலும் கோலி(2441) ரன்களுடன் முதலிடத்திலும் உள்ளனர்.
அதேபோல டி20 போட்டிகளில் 17 அரை சதம்,4 சதங்களுடன் 2-வது இடத்தில் ரோஹித் சர்மா இருக்கிறார்.22 அரை சதங்களுடன் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை கோலி ஒரு சதம் கூட டி20 போட்டிகளில் அடிக்கவில்லை எனினும் அவரது பேட்டிங் சராசரி 50* ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.எது எப்படியோ முதலிடத்துக்கு இரண்டு இந்திய வீரர்கள் போட்டி போடுவது ஆரோக்கியமான விஷயம் தானே!