'கேன்சல்' பண்றதுக்கு முன்னாடியே... மைதானத்தை விட்டு 'வேகமாக' வெளியேறிய வீரர்கள்... உடைந்த ரகசியம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டி20 போட்டியில் இரு நாட்டின் வீரர்களும் மைதானத்தை விட்டு முன்னதாகவே வெளியேறிய ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது. முதல் போட்டி மழையினால் தடைபட்டது. மைதானத்தை காயவைக்க என்னென்னவோ செய்தும், போட்டியை நடத்த முடியவில்லை.
கடைசியாக மைதானத்தை 9.30 மணிக்கு பரிசோதனை செய்வதாகவும், அப்போதும் மைதானம் தயாராகவில்லை என்றால், போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்படும் என்றும் அம்பயர் தெரிவித்தார். கடைசியில் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
போட்டி நடைபெறாமல் போனதற்கு அசாம் மாநில கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் அதன் ஊழியர்கள் தான் காரணம் என்று புகார் எழுந்தது. இந்தநிலையில் போட்டி நடைபெறாமல் போனதற்கு முன்பாகவே வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறியதாக அசாம் மாநில கிரிக்கெட்அமைப்பின் செயலாளர் தெரிவித்து இருக்கிறார்.
போட்டி 9.54 மணிக்கு கைவிடப்பட்டது ஆனால் இரண்டு நாட்டு வீரர்களும் 9 மணிக்கே மைதானத்தை விட்டு வெளியேறி விட்டார்கள் அந்த மர்மம் தான் தனக்கு புரியவில்லை என்றும் அவர் கூறி இருக்கிறார். இந்த சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.