உலகக் கோப்பை வரலாற்றில்.. ‘மிக மோசமான சாதனையைப் பதிவு செய்த இந்திய வீரர்..’
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 337 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்துள்ளது. இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ் (111), பென் ஸ்டோக்ஸ் (79), ஜாசன் ராய் (66) ஜோ ரூட் (44) ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இந்திய அணியில் ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்த, பும்ரா ரன்கள் குறைவாகக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் எடுத்துள்ளார். அதேசமயம் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் ரன்களை அதிகமாகக் கொடுத்துள்ளனர். 10 ஓவர்களில் குல்தீப் 72 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்ற, அதைவிட மோசமாக சாஹல் 88 ரன்களைக் கொடுத்துள்ளார். மேலும் அவர் விக்கெட் எதையும் வீழ்த்தவில்லை.
இதுவே உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி வீரர் ஒருவரின் மோசமான பந்துவீச்சாகும். இதன்மூலம் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் கொடுத்த இந்திய வீரர் என்ற மோசமான சாதனையைப் பதிவுசெய்துள்ளார் சாஹல். இதற்கு முன்னர் அதிகபட்சமாக இந்திய வீரர் ஜவகல் ஸ்ரீநாத் 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் 87 ரன்கள் கொடுத்திருந்தார்.