விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘என்றும் தல தோணி’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தோனி விளையாடிய விதம் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘என்றும் தல தோணி’..

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 337 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்துள்ளது. இந்திய அணியில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தோனி 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். கேதர் ஜாதவ் 13 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணியின் தோல்விக்கு பவுலர்கள் அதிக ரன்கள் கொடுத்தது, பேட்டிங் என பல காரணங்கள் உள்ளன. இதில் தோனி மற்றும் ஜாதவ் இருவரும்  கடைசி 5 ஓவர்களில் விளையாடிய விதம் பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடைசி நேரத்தில் தோனி அதிரடியாக விளையாடாததே காரணம் எனப் பலரும் கூறி வருகின்றனர்.

இந்திய அணியின் தோல்விக்கு தோனியே காரணம் எனக் கூறிப் பலர் சமூக வலைத்தளங்களில் மீம்களையும் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தோனி ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக ‘என்றும் தல தோணி’ என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ICCWORLDCUP2019, INDVSENG, MSDHONI