'ஏன் இப்படி???... நல்லாதான போய்ட்டு இருந்துது?!!'... 'கோலியை அவுட்டாக்கி, தானும் அவுட்டாகி'... 'பெரிய டிவிஸ்ட்டாக கொடுத்த வீரர்!!!"...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த கோலி - ரஹானே ஜோடி படுமோசமாக ஆட்டமிழந்துள்ளனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பகலிரவு போட்டியான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கி நடந்து வருகிறது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்ய, தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா இருவரும் களமிறங்கினர். இன்னிங்ஸின் முதல் ஓவரின் 2வது பந்திலேயே பிரித்வி ஷா டக் அவுட் ஆக, மயங்க் அகர்வால் 17 ரன்களிலும், புஜாரா 43 ரன்களிலும் அவுட்டாக, இந்திய அணி 100 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தது.
அதன்பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், துணைக்கேப்டன் ரஹானேவும் சேர்ந்து சிறப்பாக விளையாடி 4வது விக்கெட்டிற்கு 88 ரன்களை சேர்த்தனர். ஆனால் விராட் கோலி 74 ரன்களுடன் சதத்தை நோக்கி விளையாடிக்கொண்டிருந்தபோது, ரன் அவுட் ஆகி வெளியேறினார். நேதன் லயன் வீசிய 77வது ஓவரின் கடைசி பந்தை மிட் ஆப் திசையில் அடித்த ரஹானே ரன்னுக்கு கோலியை அழைத்தார். இதையடுத்து கோலி வேகமாக ஓடிவந்தபோது பாதியில் ரஹானே வேண்டாமெனக் கூற, அதற்குள் பந்தை பிடித்த ஹேசில்வுட் பவுலர் லயனிடம் பந்தை வீசி கோலியை ரன் அவுட் ஆக்கினார். இதைத்தொடர்ந்து பின்னர் ரஹானேவும் 42 ரன்களுக்கு ஸ்டார்க்கின் பந்தில் ஆட்டமிழந்து நிலைமையை இன்னும் மோசமாக்கினார்.
Nightmare scenario for India, pure joy for Australia!
Virat Kohli is run out after a mix up with Ajinkya Rahane! @hcltech | #AUSvIND pic.twitter.com/YdQdMrMtPh
— cricket.com.au (@cricketcomau) December 17, 2020
மற்ற செய்திகள்