'என் கரியர்ல யாரையும் இத பண்ணவிட்டதில்ல!!!'... 'அந்த இந்திய பவுலர் மட்டும் தான்'... 'வருத்தத்துடன் பகிர்ந்த ஆஸி. வீரர்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சொதப்பியது குறித்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் வேதனை தெரிவித்துள்ளார்.

'என் கரியர்ல யாரையும் இத பண்ணவிட்டதில்ல!!!'... 'அந்த இந்திய பவுலர் மட்டும் தான்'... 'வருத்தத்துடன் பகிர்ந்த ஆஸி. வீரர்!!!'...

தற்போது நடந்து வரும் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் முக்கிய வீரரான ஸ்டீவ் ஸ்மித் இதுவரை 0, 1 நாட் அவுட், 0, 8 என சொதப்பியே வருகிறார். ஆஸ்திரேலிய அணியின் தோல்விக்கு இவருடைய பேட்டிங் சொதப்பலும் ஒரு காரணமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென் ரேடியோவில் தன் பேட்டிங் தொடர்பாக பேசியுள்ள ஸ்டீவ் ஸ்மித், "இப்போதைக்கு களத்தில் சிறிது நேரம் செலவிடுவதை எதிர்நோக்குகிறேன். அதுதான் எனக்கு முக்கியமானது. இந்த ஆண்டில் நான் 64 பந்துகள் ஆடியதுதான் அதிக நேரம் நான் ஆடியதாகும் அதுவும் ஒருநாள் போட்டிகளில்.

 INDvsAUS No Spinner Has Done That To Me Steve Smith About Ashwin

வலைப்பயிற்சியில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஆடலாம். ஆனால் நிஜமான போட்டியை அது பிரதிபலிக்காது. அதனால்தான் கிரீசில் நேரத்தைக் கூடுதலாகச் செலவிட வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் அது மிகக்கடினம்தான். ஏனெனில் நல்ல பவுலர்கள் இருக்கும் அணிக்கு எதிராக கிரீசில் நாம் சவுகரியமாக ஆட முடியாது. நான் எனக்குப் பிடித்த வகையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆடவில்லை. நான் அவரை நெருக்கடிக்குத் தள்ளியிருக்க வேண்டும். ஆனால் நான் அவரை என் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதித்து விட்டேன்.

 INDvsAUS No Spinner Has Done That To Me Steve Smith About Ashwin

இதை நான் எந்த ஸ்பின்னருக்கும் என் கரியரில் இதுவரை அனுமதித்ததில்லை. நான் இந்தியப் பந்து வீச்சை எதிர்த்து தாக்குதல் ஆட்டம் ஆடியிருக்க வேண்டும். இன்னும் கொஞ்சம் ஆக்ரோஷம் காட்டியிருக்க வேண்டும். அப்படி ஆடியிருந்தால் அவர்கள் பவுலிங் உத்தியை மாற்றியிருப்பார்கள். நான் அதிக நேரம் ஆட வேண்டும் என்று நினைத்ததால் ஆக்ரோஷம் காட்ட முடியவில்லை. ஒரு விதத்தில் இருபுறமும் கூர்தீட்டிய வாள்தான் என் முன்னால் உள்ளது. ஆனால் என் மீது நான் நம்பிக்கை வைத்து என் ஆட்டத்தை ஆட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்