'மோசமான' சாதனை... 39 ஆண்டுகளாக இந்தியாவைத் 'துரத்தும்' சோகம்... 2 பேர் மட்டும் 'கிரேட்' எஸ்கேப்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி இன்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் இந்திய ரசிகர்கள் மிகுந்த சோகத்துடன் தங்களது வருத்தங்களை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுதவிர ஒருசில புள்ளிவிவரங்களையும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இதுவரை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய கேப்டன்களின் பட்டியலை வெளியிட்டு உள்ளனர். இந்த பட்டியலில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் ஆகியோருடன் விராட் கோலியும் இணைந்துள்ளார்.
Indian captain to lose an ODI match by 10 wickets:
1981: S Gavaskar
1999: Sachin Tendulkar
2000: S Ganguly
2005: R Dravid
2020: V #Kohli*
2 famous captain who didn't lose by 10 wickets are
Kapil Dev & #Dhoni 🔥
Both Won World Cup !🤘#INDvsAUS
— MUNNA AHMAD (@munnaahmad8290) January 14, 2020
இந்த பட்டியலில் கேப்டனாக கபில்தேவ், தோனி இருவரும் இடம் பிடிக்கவில்லை. அதேநேரம் அவர்கள் இருவரும் இந்திய நாட்டுக்காக உலகக்கோப்பையை வென்று கொடுத்தவர்கள் என்பதையும் ரசிகர்கள் பகிரத் தவறவில்லை.