"இனிவர்ற போட்டிகளிலும் இந்தியாவுக்கு இதே நிலைமைதான்!!!"... 'அதிர்ச்சி கணிப்பை வெளியிட்டுள்ள'... 'பிரபல வீரர் கூறும் காரணம்?!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் குறித்து மைக்கேல் வாகன் கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

"இனிவர்ற போட்டிகளிலும் இந்தியாவுக்கு இதே நிலைமைதான்!!!"... 'அதிர்ச்சி கணிப்பை வெளியிட்டுள்ள'... 'பிரபல வீரர் கூறும் காரணம்?!!'...

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. முதலில் ஒரு நாள் தொடர் நடத்தப்படும் நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது.  அதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியில் பின்ச் 114 (124) மற்றும் ஸ்மித் 105 (66) என இருவரும் சதம் அடிக்க இந்திய அணிக்கு 375 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

INDvsAUS Michael Vaughan Predicts India To Lose All Three Formats

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா (90) மற்றும் ஷிகர் தவான் (74) ரன்கள் எடுத்து சரிவில் இருந்து அணியை மீட்டனர். இருப்பினும் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 308 ரன்களே எடுத்து இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து இந்த போட்டியில் இந்திய அணியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.

INDvsAUS Michael Vaughan Predicts India To Lose All Three Formats

இதுதொடர்பாக பேசியுள்ள மைக்கேல் வாகன், "கடந்த 9 மாதங்களில் தன்னுடைய முதல் சர்வதேச போட்டியில் விளையாடிய இந்திய அணி சிறந்த முறையில் இல்லை. அவர்கள் பந்து வீச்சில் அதிக ரன்களை விட்டு கொடுத்தனர்.  பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்படவில்லை. அவர்கள் அதிரடியாக விளையாடினாலும் பேட்டிங்கில் ஒன்றிணைந்து செயல்பட முடியவில்லை. ஐபிஎல் போட்டிகளில் விளையாடியபோதும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் சர்வதேச போட்டியில் ஓரணியாக இந்திய வீரர்களால் திரும்ப முடியவில்லை. சர்வதேச ஒரு நாள் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி பழைய பள்ளிக்கூடம் போல உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் அனைத்து போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணியை ஆஸ்திரேலியா தோற்கடிக்கும் என்றே நான் நினைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்