‘இந்தப் போட்டிக்கே முக்கியத்துவம்’???... ‘வழக்கத்துக்கு மாறாக’... ‘பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்’... ‘வெளியான முக்கிய தகவல்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் முதலில் விளையாட இருந்தாலும், கடைசியாக நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கு முக்கியத்துவம் அளிப்பதாக தெரியவந்துள்ளது.

‘இந்தப் போட்டிக்கே முக்கியத்துவம்’???... ‘வழக்கத்துக்கு மாறாக’... ‘பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்’... ‘வெளியான முக்கிய தகவல்’...!!!

ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் முடிந்ததும், துபாயில் இருந்து இந்திய அணி நேரடியாக ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்க சிட்னி நகருக்கு சென்றது. அங்கே கொரோனா பரிசோதனை மேற்கொண்ட இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்தநிலையில், 3 வடிவ தொடர்களுக்கான அணியில் இடம்பிடித்துள்ள பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் அனைவருமே டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பயிற்சியில் பங்கேற்று வருகின்றனர்.

INDvsAUS 2020-2021: Indian Team preparing for Test Match Practice

வழக்கத்துக்கு மாறாக வலைப்பயிற்சியை தவிர்த்து, மைதானத்தின் மைய ஆடுகளத்தில் சிவப்பு மற்றும் பிங்க் நிற பந்துகளைக் கொண்டு, அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். மேலும், நான் ஸ்டிரைக்கர் பகுதியில் ஒரு பேட்ஸ்மேனையும் வைத்து பயிற்சி செய்தனர். கொரோனாவால் இந்திய அணி வீரர்கள், கடந்த பல மாதங்களாக எந்தப் போட்டியிலும் கலந்துகொள்ளாமல், கடந்த 2 மாதங்களாக ஐபிஎல் போட்டியில் மட்டுமே விளையாடினர்.

இதனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பயிற்சியைத் தவிர்த்து டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. மேலும், தற்போது இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதனை தக்கவைத்துக்கொண்டு, கோப்பையை வெல்வதற்கு, தற்போது வரும் 4 போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் மற்றும் அதற்கு அடுத்ததாக வரும் 4 போட்டிகள் கொண்ட இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி குறிப்பிடத்தக்க அளவில் வென்றே ஆக வேண்டும்.

INDvsAUS 2020-2021: Indian Team preparing for Test Match Practice

இதன் காரணமாகவும், டெஸ்ட் தொடருக்கு முன் இந்திய வீரர்களுக்கு அதற்கு ஏற்ற சூழ்நிலையில் ஆட நீண்ட பயிற்சி அவசியம் என்பதால், தற்போது அனைத்து வீரர்களையுமே, டெஸ்ட் போட்டியின் பயிற்சியில் ஈடுபடுத்தலாம் என்று கேப்டன் விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி திட்டம் வடிவமைத்ததாக கூறப்படுகிறது.

INDvsAUS 2020-2021: Indian Team preparing for Test Match Practice

இதற்குத் தான் இந்திய அணியில் மூன்று அணிகளையும் சேர்த்து 24 வீரர்களுக்கும் மேல் இருக்குமாறு பார்த்து அணித் தேர்வு செய்துள்ளது பிசிசிஐ என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம், இந்திய வீரர்கள் தங்களுக்குள்ளே இரு அணிகளை பிரித்துக் கொண்டு பயிற்சி செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. 

மற்ற செய்திகள்