இந்திய டீமோட ... ரொம்ப முக்கியமான 'பிரச்சினை' தீந்துடுச்சு போல... இளம்வீரருக்கு 'செம' பாராட்டு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா அணிகள் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 387 ரன்கள் குவித்தது. ஓபனிங் பேட்ஸ்மேன்கள் ரோஹித்(159), ராகுல் (102) இருவரும் சதமடித்து அசத்தினர்.

இந்திய டீமோட ... ரொம்ப முக்கியமான 'பிரச்சினை' தீந்துடுச்சு போல... இளம்வீரருக்கு 'செம' பாராட்டு!

2-வதாக களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது. இதனால் இந்திய அணியின் வெற்றி தற்போதே உறுதியாகி விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் இன்றைய போட்டியில் மிகவும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயரை ஐசிசி பாராட்டி இருக்கிறது. இதுகுறித்து ஐசிசி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்,'' 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கும் ஷ்ரேயாஸ் 6 அரைசதங்கள் ( 9, 88, 65, 18, 30, 71, 65, 70, 53) அடித்திருக்கிறார். இந்தியாவின் 4-வது பேட்டிங் பிரச்சினை தீர்ந்ததா?,'' என மறைமுகமாக கேள்வியெழுப்பி 4-வதாக இறங்கி பேட்டிங் செய்வதற்கு ஷ்ரேயாஸ் பொருத்தமானவர் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறது.

இதனால் வரும் நாட்களில் 4-வதாக ஷ்ரேயாஸ் ஐயரை இந்திய அணி களமிறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.