"கோலி பிறந்தநாள் அதுவுமா,,.. 'கூகுள்'ல அதிகம் இதத் தான் தேடியிருக்காங்க..." ஆத்தி, எப்படி எல்லாம் யோசிக்குறாங்க பாருங்க"!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் தற்போதைய கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான விராட் கோலிக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்தியா மட்டுமில்லாமல், பல நாடுகளில் இவரது பேட்டிங் ஸ்டைலை அதிகம் பேர் ரசித்து வருகின்றனர்.

"கோலி பிறந்தநாள் அதுவுமா,,.. 'கூகுள்'ல அதிகம் இதத் தான் தேடியிருக்காங்க..." ஆத்தி, எப்படி எல்லாம் யோசிக்குறாங்க பாருங்க"!!!

இந்நிலையில், இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ட்விட்டரில் கோலி பிறந்தநாள் தொடர்பான ஹேஸ்டேக்குகள் அதிகம் டிரெண்ட் ஆகி வருகின்றன.

இதனிடையே, கூகுளில் இன்று இந்தியர்கள் அதிகம் பேர் கோலி குறித்து அதிகம் எதனைத் தேடியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. பலர் கூகுளில் கோலியின் தொலைபேசி எண்ணைத் தேடியுள்ளனர். இதனை பலர், விராட் கோலியை தொலைபேசியில் அழைத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கத் தான் இப்படி செய்துள்ளனர் என நக்கலாக தெரிவித்து வருகின்றனர். கூகுளில் கோலி குறித்து இன்று தேடப்பட்ட சம்பவம் அதிகம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்