மகளின் கிரிக்கெட் கனவுக்காக நிலத்தை எல்லாம் விற்ற அப்பா.. இந்தியாவையே பெருமைப்பட வச்ச மகள்.. நெகிழ்ச்சி பின்னணி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி 20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா வென்று சாதனை படைத்திருக்கிறது. இதில் இறுதி போட்டியில் முக்கிய நேரத்தில் சிறப்பாக விளையாடிய கங்கோடி திரிஷா ரெட்டி-க்கு எப்போதும் உறுதுணையாக இருந்திருக்கிறார் அவரது தந்தை.

மகளின் கிரிக்கெட் கனவுக்காக நிலத்தை எல்லாம் விற்ற அப்பா.. இந்தியாவையே பெருமைப்பட வச்ச மகள்.. நெகிழ்ச்சி பின்னணி..!

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | கையிலே ஆகாசம்.. முதல் தடவை விமானத்தில் பறந்த இளைஞரின் நெகிழ்ச்சி பதிவு.. வாழ்த்து சொன்ன நடிகை குஷ்பு..!

இந்த உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்திருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து அணி. 17.1 ஓவர்களில் வெறும் 68 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய மகளிர் அணி, மூன்று விக்கெட்டுகளை இழந்து 14 ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்திருந்தது. அதுமட்டுமில்லாமல், மகளிருக்கான 19 வயதுக்கு உட்பட்டோர் டி 20 உலக கோப்பையையும் இந்திய மகளிர் அணி வென்று வரலாற்று சாதனையும் புரிந்துள்ளது.

Indian Women Cricketer Trisha Reddy father sacrifices for her life

Images are subject to © copyright to their respective owners.

இதில் கங்கோடி திரிஷா 24 ரன்கள் சேர்த்து அணியின்  வெற்றிக்கு உதவினார். ஆந்திர மாநிலத்தின் பத்ராசலத்தை சேர்ந்தது திரிஷாவின் குடும்பம். கிரிக்கெட் மீது திரிஷா கொண்டுள்ள ஆர்வத்தின் காரணமாக அவரது தந்தை கங்கோடி செகந்திராபாத்திற்கு குடும்பத்துடன் குடியேறியுள்ளார். தொடர்ந்து, திரிஷாவின் கனவு ஜெயிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர் தான் நடத்திவந்த உடற்பயிற்சி நிலையத்தை விற்பனை செய்திருக்கிறார்.

Indian Women Cricketer Trisha Reddy father sacrifices for her life

Images are subject to © copyright to their respective owners.

அதனை தொடர்ந்து, சொந்த ஊரில் இருந்த 4 ஏக்கர் நிலத்தையும் விற்று, திரிஷாவின் கோச்சிங்கிற்கு உதவியுள்ளார். சிறிய வயதில் தனது மகளை மைதானத்துக்கு அழைத்துச் செல்லும் அவர் தினசரி 300 பந்துகள் வரை வீசியதாகவும், தனது மகளின் வெற்றிக்காக என்ன வேண்டுமானலும் செய்ய தயாராக இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

Indian Women Cricketer Trisha Reddy father sacrifices for her life

Images are subject to © copyright to their respective owners.

கையில் இருந்த சொத்தை விற்று தன்னை உயர்த்திய தந்தைக்கு உலகக்கோப்பையை வென்று பரிசளித்திருக்கிறார் திரிஷா.

Also Read | "நான்தான் 370 டிகிரில பேட்டிங் ஆட கத்துக்கொடுத்தேன்".. கலாய்த்த சஹால்.. சூரிய குமார் யாதவின் பங்கமான கமெண்ட்😂..!

CRICKET, INDIAN WOMEN CRICKETER, TRISHA REDDY, TRISHA REDDY FATHER

மற்ற செய்திகள்