பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகலா? இந்திய அணிக்கு ஏற்பட்ட சிக்கல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆசிய கோப்பை தொடருக்கு புறப்படும் நேரத்தில் ராகுல் டிராவிட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
Also Read | மாத்திரை டப்பா வடிவில் 'திருமண' அழைப்பிதழ்.. "Expiry Date'ல இருந்த விஷயம் தான் அல்டிமேட்"!!
இந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடரை நடத்த வேண்டிய இலங்கை, மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் காரணமாக போட்டியை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது. எனவே போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் இன்று துபாய் செல்ல வேண்டிய இந்திய அணியில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொரோனா காரணமாக துபாய் செல்ல முடியாமல் போய்விட்டது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்த பின் பரிசோதனை முடிவுகளை வைத்து துபாய் செல்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ராகுல் டிராவிட் கொரோனா பரிசோதனை முடிவுகள் மீண்டும் பாஸிட்டிவ் ஆக வந்தால் இந்திய அணியை பயிற்சி அளிக்கும் பொறுப்பு லட்சுமணுக்கு வழங்கப்படலாம். ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடரில் VVS லட்சுமண் பயிற்சியாளராக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி குரூப் A இல் உள்ளது. ஆகஸ்ட் 28, ஞாயிற்றுக்கிழமை, துபாயில் இந்திய அணியை பாகிஸ்தான் எதிர்கொள்ள உள்ளது. ரோஹித் ஷர்மாவின் தலைமையில் இந்திய அணி இந்த தொடரில் விளையாட உள்ளது.
ஹாங்காங், குவைத், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் ஆகஸ்ட் 20 முதல் 26 வரை நடைபெறும் தகுதிச் சுற்றில் ஆடிய பின்னர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் ஏ பிரிவில் பங்கேற்கின்றன.
அடுத்த, B பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளன. ஆகஸ்ட் 27 அன்று தொடரின் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இலங்கை எதிர்கொள்கிறது.
ஆசிய கோப்பை 2022-ன் படி, ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.
மற்ற செய்திகள்