விக்கெட் எடுக்குறதுல புது சாதனைக்குத் தயாரான ‘நம்ம ஊர்’ வீரர்..!- பின்னுக்குத் தள்ளப்படும் ஹர்பஜன் சாதனை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசுமார் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை தாய் மண்ணில் நடத்த உள்ளது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கான்பூரிலும் 2-வது போட்டி மும்பையிலும் நடைபெற உள்ளது.
முதல் போட்டிக்கு அணியின் கேப்டன் கோலி ஓய்வில் இருப்பதால் அஜிங்கியா ரஹானே கேப்டன் ஆக விளையாடுவார். 2-வது மும்பை போட்டியில் கேப்டன் விராட் கோலி தனது பொறுப்பில் இணைந்து கொள்கிறார். மிகுந்த நீண்ட இடைவெளிக்குப் பின்னர் டெஸ்ட் தொடருக்கு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின் மூலம் ‘கம்-பேக்’ கொடுத்துள்ளார் சுழற்பந்து வீச்சாளர் ஆன அஸ்வின். அஸ்வின் உடன் இந்த தொடரில் ஜடேஜா விக்கெட் வீழ்ச்சிக்குத் தயாராக உள்ளார்.
இந்தியா- நியூசிலாந்து டி20 தொடரின் மூலம் 4 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய அணியில் இணைந்த அஸ்வின் தொடர்ந்து தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதேபோல், இந்த டெஸ்ட் தொடரிலும் தனது வேட்டையை அஸ்வின் தொடரும் பட்சத்தில் புதிய சாதனை ஒன்றை பந்துவீச்சாளர் ஆகப் படைக்க உள்ளார் அஸ்வின்.
‘இந்திய அணியின் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய உயர் தர பந்துவீச்சாளர்கள்’ பட்டியலில் இணையப் போகிறார் அஸ்வின். இன்னும் 5 விக்கெட்டுகள் எடுத்தால் அந்தப் பட்டியலில் இணைந்து ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்துவிடுவார் அஸ்வின். அஸ்வின் இதுவரையில் 70 டெஸ்ட் போட்டிகளில் 413 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். ஹர்பஜன் சிங் 103 போட்டிகளில் 417 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘இந்திய அணியின் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய உயர் தர பந்துவீச்சாளர்கள்’ பட்டியலில் முதல் இடத்தின் 619 விக்கெட்டுகள் உடன் அணில் கும்ப்ளே, 434 விக்கெட்டுகள் உடன் கபில் தேவ், 3-ம் இடத்தில் 417 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹர்பஜன் சிங் இருக்கின்றனர். அடுத்தடுத்து இஷாந்த் சர்மா, ஜாகிர் கான் ஆகியோர் உள்ளனர்.
ஆக, ஹர்பஜனின் விக்கெட் வேட்டையை அஸ்வின் முந்தும் பட்சத்தில் பட்டியலில் 3-ம் இடம் பிடித்து அணில் கும்ப்ளே, கபில் தேவ் போன்ற ஜாம்பவான்கள் வரிசையில் நிற்கப் போகிறார் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி முத்தையா முரளிதரண் முதல் இடத்தில் இருக்கிறார். சர்வதேச பட்டியலில் அஸ்வினுக்கு 14-வது இடம் உள்ளது.
மற்ற செய்திகள்