"யாருமே அதை பத்தி பேசுறது இல்ல"... ஷாக் கொடுத்த இரண்டாவது ODI.. ரோஹித் ஷர்மா Open Talk..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடிய விதம் பற்றி பேசியிருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா.

"யாருமே அதை பத்தி பேசுறது இல்ல"... ஷாக் கொடுத்த இரண்டாவது ODI.. ரோஹித் ஷர்மா Open Talk..

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "அவங்க இங்க நல்லாருக்காங்க" - தன் வீட்டு விசேஷத்துக்கு சீர்வரிசையுடன் வந்த வடமாநில தொழிலாளர்கள் குறித்து உரிமையாளர் EXCLUSIVE பேட்டி

கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர்

தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர் நடைபெற்று முடிந்திருக்கிறது. நான்கு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டி நாக்பூரில் வைத்து நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2 - 0 என்ற நிலையில் முன்னிலை பெற்றது.

அதற்கு பிறகு இந்தூரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றபெற்றிருந்தது. இதனால் 2-1 என்ற நிலை ஏற்படவே, இந்திய அணி கோப்பையை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் நான்காவது டெஸ்ட் போட்டிடிரா ஆகவே, 2-1 என்ற கணக்கில் கோப்பையை வென்றிருக்கிறது இந்திய அணி. இதன் பலனாக உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றிருக்கிறது.

Indian skippen Rohit sharma About losing wickets in 2nd ODI

Images are subject to © copyright to their respective owners.

ஒருநாள் தொடர்

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் துவங்கி நடைபெற்று வருகிறது. மும்பையில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனையடுத்து விசாகப்பட்டினத்தில் வைத்து இரண்டாவது போட்டி நடைபெற்றது. அதில், ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றிருந்தது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் இந்திய பேட்ஸ்மென்களை திணறடித்தார் என்றே சொல்ல வேண்டும். அபாரமாக பந்து வீசிய அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

ரோஹித் ஷர்மா

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா,"எதிரணியில் ஒரு தரமான பந்துவீச்சாளர் இருந்தால், அவர் விக்கெட்டுகளை வீழ்த்துவார். உங்களின் சிறந்த வீரர்களை அவுட்டாக்க அவர் தன்னால் இயன்றவரை முயற்சி செய்வார். இடது கை வீரராக இருந்தாலும் சரி, வலது கை வீரராக இருந்தாலும் சரி, அவர்கள் விக்கெட்டுகளைப் பெறுவார்கள். வலது கை பந்து வீச்சாளர்கள் எங்களுக்கு சவாலாக இருந்திருக்கின்றனர். யாரும் அதைப் பற்றி பேசுவதில்லை. விக்கெட்டை இழந்தால் எப்போதும் சிரமம் தான் ஏற்படும். அடுத்த பிளான் என்ன? அதனை எப்படி கையாள்வது என்பது பற்றி யோசிக்க வேண்டும்" என்றார்.

Indian skippen Rohit sharma About losing wickets in 2nd ODI

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து பேசிய அவர்,"இந்த போட்டியில் எங்களுடைய பிளான்கள் நிறைவேறாமல் போய்விட்டன. அடுத்த போட்டியில் அவை கைகொடுக்கும் என நம்புகிறோம். கடந்த போட்டிகளில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை எடுத்தது நம் அனைவர்க்கும் தெரியும். ஆகவே, வரும் போட்டியில் அதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே பார்க்கிறேன்" என்றார்.

Also Read | "என்னதான் பெரிய பிளேயரா இருந்தாலும்.. என் அம்மா இத பத்தி கேட்டுட்டே இருப்பாங்க".. 14 வருஷத்துக்கு அப்புறம் டிகிரி.. ஷகிப் அல் ஹசன் உருக்கம்..!

CRICKET, ROHIT SHARMA

மற்ற செய்திகள்