Vilangu Others

"ருத்துராஜ்-க்கு சான்ஸ் குடுக்க வேணாம்.." முன்னாள் வீரர் சொல்லும் காரணம்.. ஓஹோ, இதான் விஷயமா??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டி 20 தொடரை, இந்திய அணி கைப்பற்றி பட்டையைக் கிளப்பியுள்ளது.

"ருத்துராஜ்-க்கு சான்ஸ் குடுக்க வேணாம்.." முன்னாள் வீரர் சொல்லும் காரணம்.. ஓஹோ, இதான் விஷயமா??

ஏற்கனவே, ஒரு நாள் தொடரில், வெஸ்ட் இண்டீஸ் அணியை வொயிட் வாஷ் செய்திருந்த இந்திய அணி, தற்போது டி 20 தொடரையும் வென்றுள்ளது.

இன்னும் ஒரு டி 20 போட்டி மட்டும் மீதமுள்ள நிலையில், ஆறுதல் வெற்றி பெறும் நோக்கத்தில், நிச்சயம் வெஸ்ட் இண்டீஸ் அணி போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ருத்துராஜ் கெய்க்வாட்

மூன்றாவது டி 20 போட்டியில் இருந்து, கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர், தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனிடையே, இந்திய அணியின் தொடக்க வீரரான இளம் வீரர் ருத்துராஜிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இஷான் கிஷானுக்கு வாய்ப்பு

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும், ருத்துராஜ் தேர்வான நிலையில், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் செட் ஆகி விட்டதால், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொடர்ந்து, தற்போது நடைபெற்று வரும் டி 20 தொடரிலும், ருத்துராஜிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக, இரண்டு போட்டிகளில் ரோஹித் ஷர்மாவுடன் இளம் வீரர் இஷான் கிஷான் களமிறங்கிருந்தார்.

indian former player about ruturaj place in 3rd t20

ரசிகர்கள் விமர்சனம்

இரண்டு போட்டிகளிலும் முறையே, 35 (42) மற்றும் 2 (10) ரன்கள் தான் எடுத்திருந்தார். முதல் போட்டியில் இஷான் கிஷான் சொதப்பிய போதும், இரண்டாவது போட்டியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால், தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல், ருத்துராஜ் புறக்கணிக்கப்பட்டு வந்தார்.

இதனால், கடுப்பான ரசிகர்கள், இது பற்றி சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மூன்றாவது டி 20 போட்டியில் யார் களமிறங்க வேண்டும் என்பது பற்றி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கருத்து தெரிவித்துள்ளார்.

பலன் இல்லை

'இஷான் கிஷானுக்கு மீண்டும் ஒரு முறை நிச்சயம் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதன் பிறகு, ருத்துராஜிற்கு இலங்கை தொடரில் வாய்ப்பினை வழங்குவது பற்றி யோசிக்கலாம். ஒரு தொடர் முழுக்க அவருக்கு வாய்ப்புகள் வழங்கலாம். ஒரு போட்டியில் மட்டும், ருத்துராஜுக்கு வாய்ப்பு வழங்குவதில் எந்த பயனும் இல்லை. தொடர் முழுக்க ஆடினால் தான், அவர்களது ஆட்டமும் நிலையானதாக இருக்கும்' என வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

indian former player about ruturaj place in 3rd t20

அவர் கூறியுள்ளது போலவே, இஷான் கிஷானுக்கு மீண்டும் வாய்ப்பினை வழங்கி, இலங்கை தொடரில், ருத்துராஜை பயன்படுத்த இந்திய அணியினரும் திட்டம் போடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

WASIM JAFFER, RUTURAJ GAIKWAD, ISHAN KISHAN, IND VS WI

மற்ற செய்திகள்