"விக்கெட் விழுகணும்".. ஷமியின் சாப்பாட்டு தட்டை முறைத்த ரவி சாஸ்திரி.. அடுத்த கொஞ்ச நேரத்துல ஷமி செஞ்ச தரமான சம்பவம்.. முன்னாள் கோச் ஸ்ரீதர் Breakings..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் கோச் ஆர். ஸ்ரீதர் தனது அனுபவங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

"விக்கெட் விழுகணும்".. ஷமியின் சாப்பாட்டு தட்டை முறைத்த ரவி சாஸ்திரி.. அடுத்த கொஞ்ச நேரத்துல ஷமி செஞ்ச தரமான சம்பவம்.. முன்னாள் கோச் ஸ்ரீதர் Breakings..!

Also Read | ”மேற்கத்திய கலாச்சாரத்தால் அழியும் நம் வேத மரபு".. பசு அரவணைப்பு தினத்தை அறிவித்து இந்திய விலங்குகள் நல வாரியம் அறிக்கை..!

ஆர்.ஸ்ரீதர் தனது ‘Coaching Beyond: My Days with the Indian Cricket Team’ எனும் புத்தகத்தை வெளியிட்டார். அதில் இந்திய கிரிக்கெட் அணி பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் அந்த புத்தகத்தில் ரவி சாஸ்திரி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியிடம் கோபம் கொண்டது பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா தோல்வியடைந்த நிலையில் மூன்றாவது போட்டி ஜோகனஸ்பெர்க்கில் நடைபெற்றது. 

Indian former coach shridar recalls ravi shastri angry with shami

Images are subject to © copyright to their respective owners.

இதில் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற 241 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா. தேநீர் இடைவெளி வரை அந்த அணி 136/3 என வலுவான நிலையில் இருந்தது.

இதுபற்றி ஸ்ரீதர் தனது புத்தகத்தில்," அப்போது மத்திய உணவு இடைவேளைக்காக இந்திய அணி பெவிலியன் திரும்பி இருந்தது. முகமது ஷமி தனது உணவை தட்டில் வைத்துக்கொண்டிருந்தார்.

Indian former coach shridar recalls ravi shastri angry with shami

Images are subject to © copyright to their respective owners.

அப்போது ரவி சாஸ்திரி,'ப்ளடி ஹெல், இங்கேயே சாப்பிட்டுவிட்டு உன்னுடைய பசியை போக்கிக்கொள்ள போகிறாயா? அல்லது விக்கெட்டுகளை வீழ்த்தவும் பசியை மீதம் வைத்திருப்பாயா?" எனக் கேட்டார். அதற்கு ஷமி சிரித்துக்கொண்டே," நிச்சயம் இங்கே சாப்பிட்டுவிட்டு அங்கே (களத்தில்) விருந்து சாப்பிட போகிறேன்" என்றார். அதன்பிறகு தேநீர் இடைவேளையிலும் ஷமியிடம் விக்கெட்டுகளை வீழ்த்துவது குறித்து ரவி பேசினார்".

Indian former coach shridar recalls ravi shastri angry with shami

Images are subject to © copyright to their respective owners.

"தேநீர் இடைவெளிக்கு பிறகு ஷமியின் பந்துகளை எதிர்கொள்ள தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களால் முடியவில்லை. 28 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஷமி. அப்போட்டியில் இந்தியா 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதன்பிறகு பெவிலியனில் ரவி ஒவ்வொருவரையும் மனதார பாராட்டினார்" எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படி பல சுவாரஸ்ய சம்பவங்களை தனது புத்தகத்தில் விவரித்திருக்கிறார் ஸ்ரீதர்.

Also Read | அஸ்வின் மாதிரியே பந்துவீசிய இளம் வீரர்.. அஸ்வினை நேர்ல பார்த்ததும் செஞ்ச நெகிழ வைக்கும் காரியம்..!

CRICKET, SHRIDAR, INDIAN FORMER COACH SHRIDAR, RAVI SHASTRI, SHAMI

மற்ற செய்திகள்