'டூ' என கத்தி நியூசிலாந்து பேட்ஸ்மேனை குழப்பிய 'இந்திய' வீரர் .... எச்சரித்த 'நடுவர்' ... 'ஒயிட் வாஷ்' செய்த 'நியூசிலாந்து' !
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் போது நியூசிலாந்து வீரர் ரன் ஓடி கொண்டிருக்கையில் இந்திய அணியின் பீல்டர் ஒருவர் அடுத்த ரன்னிற்கு அழைத்து பேட்ஸ்மேனை குழப்பியதால் நடுவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை எச்சரித்தார்.
132 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டாம் லதாம் மற்றும் டாம் ப்ளண்டல் களமிறங்கினர். நான்காவது ஓவரை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட லதாம் பந்தை லெக் சைடு அடித்து விட்டு ஒரு ரன் ஓடினார். அப்போது இந்திய வீரர்களில் ஒருவர் 'டூ' என இரண்டாவது ரன்னிற்காக கத்த நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் சற்று குழப்பமடைந்தனர். இரண்டாவது ரன்னிற்கு போலியாக அழைத்ததற்கு ஆட்ட நடுவர் ரிச்சர்ட் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உட்பட இந்திய அணியை எச்சரித்தார்.
கிட்ட தட்ட தோல்வியின் பிடியில் இருந்த இந்திய அணியில் வீரர் ஒருவர் இது போன்ற விதிக்கு புறம்பான செயலில் ஈடுபட்டது கிரிக்கெட் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளளது. இந்த டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணியை ஒயிட் வாஷ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
— faceplatter49 (@faceplatter49) March 2, 2020