Ind Vs Ban : போட்டிக்கு நடுவே பிரஷ்ஷுடன் வலம் வந்த இந்திய அணி ஊழியர்.. காரணம் தெரிஞ்சு கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, சூப்பர் 12 சுற்றில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இதுவரை 4 போட்டிகள் ஆடி உள்ள இந்திய அணி, அதில் மூன்றில் வெற்றி கண்டுள்ளது. முதல் இரண்டு போட்டிகளில் முறையே பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் வெற்றி பெற்றிருந்தது இந்திய அணி.
இதனைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவி இருந்த இந்திய அணி, தங்களின் நான்காவது போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி இருந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக கோலி 64 ரன்களும், ராகுல் 50 ரன்களும் எடுத்திருந்தனர். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்களை பங்களாதேஷ் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து 16 ஒவர்களில் 151 ரன்கள் என்ற இலக்கும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னர், கடைசி ஓவரில் 20 ரன்கள் வேண்டும் என்ற சூழலும் உருவாகி இருந்தது. இதனால் பரபரப்பு தொற்றிக் கொள்ள, அந்த ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அந்த ஓவரில் 14 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட இந்திய அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது மழை பெய்ததால் மைதானத்தில் ஈரப்பதம் நிலவி இருந்தது.
அப்படி ஒரு சூழலில் இந்திய அணியின் ஊழியரான ரகு செய்து வந்த விஷயம், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இந்திய அணி வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபடும் போது பேட்ஸ்மேன்கள் பயிற்சி செய்ய பந்தை எறியக் கூடியவர் ரகு ராகவேந்திரா.
இவர் கையில் பிரஷ் ஒன்றுடன் போட்டி நடக்கும் நேரத்தில் அங்கே வலம் வந்தபடி இருந்தார். இதற்கு காரணம், மழை பெய்திருந்ததால் இந்திய வீரர்களின் காலணியில் உள்ள ஆணி போன்று வைக்கப்பட்டிருக்கும் விஷயம், புற்கள் மற்றும் மண் உள்ளிட்டவற்றில் சிக்கிக் கொள்ளும். இதனால் வீரர்கள் விழுந்து காயம் ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதால் இந்திய அணியின் த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்ட் ரகு, வீரர்கள் காலில் மண் சேர்ந்தால் அதனை சுத்தம் செய்ய பிரஷ்ஷை கொண்டு மைதானத்தில் வலம் வந்துள்ளார்.
மழை நின்று போட்டி ஆரம்பித்த சமயத்தில் இப்படி கனகச்சிதமாக செயல்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் ஊழியரான ரகுவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Also Read | "இந்தியா தோத்தா ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்தவர கல்யாணம் பண்றேன்".. நடிகையின் பரபரப்பு ட்வீட்!!
மற்ற செய்திகள்