உலகக்கோப்பை T20: ஆறிப்போன உணவால் உண்ணா விரதம்? பயிற்சியை புறக்கணித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்? முழு தகவல்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

8-வது ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2022 தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் தொடங்கி உள்ளது .

உலகக்கோப்பை T20: ஆறிப்போன உணவால் உண்ணா விரதம்? பயிற்சியை புறக்கணித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்? முழு தகவல்

Also Read | "என்னா அடி.. எங்ககிட்ட அவரு அப்படி அடிக்காம இருக்கணும்".. கோலி பற்றி பேசிய நெதர்லாந்து கேப்டன்..!

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மேல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான்.

Indian cricketers boycotts lunch due to cold and inadequate Menu

இதனை தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி சேஸிங்கை துவங்கியது. ஆரம்பத்திலேயே ரோஹித் ஷர்மா மற்றும் ராகுல் 4 ரன்களில் அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தனர். அதன்பிறகு உள்ளே வந்த கோலி நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம் சூர்யகுமார் யாதவ் அவுட்டாகி வெளியேற பாண்டியா உள்ளே வந்தார். இந்த இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதன் பலனாக இந்திய அணி வெற்றியை நோக்கி சீராக முன்னேறியது. கடைசி ஓவரின் முதல் பந்தில் பாண்டியா அவுட் ஆகினார். 40 ரன்கள் எடுத்திருந்த பாண்டியா வெளியேறிய நிலையில் உள்ளே வந்த தினேஷ் கார்த்திக், 1 ரன்னில் விக்கெட் கீப்பரிடம் அவுட் ஆகி ஷாக் கொடுத்தார்.

Indian cricketers boycotts lunch due to cold and inadequate Menu

இதனால் மைதானமே பெரும் பரபரப்பில் ஆழ்ந்தது. இறுதி பந்தில் 2 ரன் எடுக்க வேண்டிய நிலையில் அஸ்வின், வீசப்பட்ட பந்தை வைட் வாங்க ஸ்கோர் சமன் ஆனது. அடுத்த பந்தில் எக்ஸ்டரா கவரில் அஸ்வின் ஒரு ரன் அடித்து கொடுக்க இந்தியா த்ரில் வெற்றிபெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் கோலி அபாரமாக ஆடி 82 ரன்கள் குவித்தார். 53 பந்துகளை சந்தித்திருந்த கோலி  6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் விளாசினார்.

நாளை இந்திய அணி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இதற்காக இந்திய அணி மெல்போர்னில் இருந்து சிட்னி சென்றுள்ளது.

Indian cricketers boycotts lunch due to cold and inadequate Menu

சிட்னியில் நடந்த தனி பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஆறிப் போன உணவுகள் வழங்கப்பட்டது என கூறப்படுகிறது. இது குறித்து இந்திய அணியினர்  சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) புகார் அளித்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கிரிக்கெட் அணி வியாழக்கிழமை சிட்னியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இதனை முன்னிட்டு செவ்வாயன்று சிட்னியில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற பயிற்சியில் விராட் கோலி, தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது , வீரர்களுக்கு ஆறிய உணவுகள் வழங்கப்பட்டது என கூறப்படுகிறது. அதுவும் கூட போதுமான அளவிற்கு உணவு வழங்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வீரர்கள் மதிய உணவைப் புறக்கணித்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக பிசிசிஐ, ஐசிசியிடம் புகார் அளித்துள்ளது.

Also Read | "குறை எல்லாம் ஒண்ணுமே இல்ல".. பந்து வீசிய மாற்றுத்திறனாளி.. நெட்டிசன்கள் இதயத்தை வென்ற வைரல் வீடியோ!!

CRICKET, INDIAN CRICKETERS, BOYCOTTS LUNCH, SCG HOSPITALITY

மற்ற செய்திகள்