'இந்திய அணியின் முன்னாள் வீரர் மரணம்...' '1983 வேர்ல்டு கப்ல முக்கியமான பில்லர்...' - கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

983-ம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்குப் பங்களித்த யாஷ்பால் சர்மா (66) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் .

'இந்திய அணியின் முன்னாள் வீரர் மரணம்...' '1983 வேர்ல்டு கப்ல முக்கியமான பில்லர்...' - கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்...!

இந்திய அணிக்காக மொத்தம் 37 டெஸ்ட் போட்டிகள், 42 ஒருநாள் போட்டிகளில் யாஷ்பால் சர்மா விளையாடியுள்ளார். 1978-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன்முதலாக அறிமுகமானார். 1985-ல் இங்கிலாந்துக்கு எதிராக நடந்தப் போட்டியில் கடைசியாக விளையாடினார். இந்திய அணியின் தேர்வுக்குழுவிலும் அவர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு யாஷ்பால் சர்மா இன்று (13-07-2021) மறைந்தார். அவருடைய மறைவுக்கு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 1983 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் சர்மாவிற்கு இரண்டாவது இடம். மொத்தம் 8 ஆட்டங்களில் இரு அரை சதங்களுடன் 240 ரன்கள் குவித்தார்.

அப்போது இங்கிலாந்து மைதானங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் பயங்கரமாக திணறினார்கள். ஒட்டுமொத்த போட்டியிலும் இந்திய வீரர்கள் ஐந்து அரை சதங்கள் மட்டுமே எடுத்திருந்தார்கள். அதில், யாஷ்பால் சர்மா, சந்தீப் பாட்டில் ஆகியோர் தலா இரு அரை சதங்கள் எடுத்தனர்.

 

உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்று இந்திய அணி அதிர்ச்சி கொடுத்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது. 120 பந்துகளில் 89 ரன்கள் அடித்து விளாசினார் யாஷ்பால் சர்மா. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியிலும் 40 பந்துகளில் 40 ரன்களும் அரையிறுதியில் 115 பந்துகளில் 61 ரன்களும் எடுத்து இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்தார்.

 

மற்ற செய்திகள்