‘2 வாரத்துக்கு முன்னாடி அம்மா, இப்போ அக்கா’!.. இந்திய கிரிக்கெட் வீராங்கனையின் வீட்டில் அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி.. சோகத்தில் கிரிக்கெட் உலகம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தியின் சகோதரி கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலில் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்குநாள் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. அதனால் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தியின் அக்கா கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாய் செலுவம்பா தேவிக்கு (Cheluvamba Devi) கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் குடும்பத்தினர் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டர். அதில், வேதா கிருஷ்ணமூர்த்தியின் அக்கா வத்சலா சிவக்குமாருக்கு (Vatsala Shivakumar) கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில், கடந்த ஏப்ரல் 24-ம் தேதி வேதா கிருஷ்ணமூர்த்தியின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அப்போது இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்த அவர், ‘என் அம்மாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. எங்கள் குடும்பத்துக்கு இது மிகப்பெரிய இழப்பாக அமைந்துவிட்டது. எனது சகோதரிக்காக பிரார்த்தனை செய்யுங்கள். எனக்கு கொரோனா தொற்று இல்லை’ என வேதா கிருஷ்ணமூர்த்தி உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
Appreciate all the messages I have received about the loss of my Amma. As you can imagine my family is lost without her. We now pray for my sister. I have tested negative & appreciate if you can respect our privacy. My thoughts & prayers go out to those going through the same!!
— Veda Krishnamurthy (@vedakmurthy08) April 24, 2021
இந்த நிலையில் அவரது சகோதரி வத்சலா சிவக்குமாரும் சிகிச்சை பலனின்றி இன்று (06.05.2021) உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வேதா கிருஷ்ணமூர்த்தியின் அம்மா மறைந்த இரண்டு வாரங்களே ஆன நிலையில் அக்காவும் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் கிரிக்கெட் வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்திக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்