நீண்ட நாள் ‘காதலியை’ கரம்பிடித்த இந்திய ஆல்ரவுண்டர்.. மும்பையில் நடந்த கல்யாணம்.. குவியும் வாழ்த்து..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் சிவம் துபே தனது நீண்ட நாள் காதலியை கரம்பிடித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டரான சிவம் துபே (28 வயது), கடந்த 2019-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். இதுவரை இந்திய அணிக்காக 1 ஒருநாள் போட்டி மற்றும் 13 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அதேபோல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பாக விளையாடி வருகிறார். இதுவரை 21 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 314 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 6 போட்டிகளில் விளையாடி 145 ரன்களை எடுத்துள்ளார்.
இந்த நிலையில், சிவம் துபே தனது நீண்ட நாள் காதலியான அஞ்சும் கானை நேற்று திருமணம் செய்துள்ளார். இதனை இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் இருவரது நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர்.
𝑩𝒂𝒅𝒉𝒂𝒊 𝒉𝒐. 💗 #RoyalsFamily | @IamShivamDube pic.twitter.com/P06aJz85sQ
— Rajasthan Royals (@rajasthanroyals) July 16, 2021
தற்போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் சிவம் துபேவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தங்களது ட்விட்டர் பக்கத்தில், சிவம் துபேயின் திருமண புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்