"ஒவ்வொரு நாளும் இதை மறந்துடாதீங்க".. தனது உடல்நிலை குறித்து ரிஷப் பண்ட் உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விபத்தால் ஏற்பட்ட காயங்களில் இருந்து குணமாகி வரும் ரிஷப் பண்ட் தனது உடல்நிலை குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

"ஒவ்வொரு நாளும் இதை மறந்துடாதீங்க".. தனது உடல்நிலை குறித்து ரிஷப் பண்ட் உருக்கம்..!

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | இந்து, கிறிஸ்டியன் என ஒரே நேரத்துல தமிழ்நாட்டில் நடந்த 800 பேரின் திருமணம்.. அமர்க்களப்படுத்திய இஸ்லாமிய மக்கள்..!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆக வலம் வருபவர் ரிஷப் பண்ட். இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், பல்வேறு போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி வெற்றியை தேடிக் கொடுத்துள்ளார். டெஸ்ட், டி 20 மற்றும் ஒரு நாள் போட்டி என அனைத்திலும் சிறந்து விளங்கி வரும் ரிஷப் பண்ட், ஐபிஎல் தொடரிலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

இதனிடையே கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் ரூர்க்கி அருகே பண்ட், கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தின் காரணமாக அவருக்கு முழங்காலில் தசைநார் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் பண்ட் மீண்டும் இந்திய அணியில் இணைய மாதக்கணக்கில் காலம் ஆகலாம் என கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Indian Cricketer Rishabh Pant About his recovery after accident

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ரிஷப் பண்ட்,"என்னைச் சுற்றியுள்ள அனைத்தும் நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ மாறியதா என்று சொல்வது கடினம். இருப்பினும், நான் இப்போது என் வாழ்க்கையை எப்படிப் பார்க்கிறேன் என்பதில் ஒரு புதிய கண்ணோட்டத்தைப் பெற்றுள்ளேன். வாழ்வின் ஒவ்வொரு நாளையும் அதில் மேற்கொள்ளும் பணிகளையும் மகிழ்வுடன் செய்கிறேன். இன்று ஒவ்வொருவரும் சிறப்பான ஒன்றை அடைய மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு நாளும் நமக்கு மகிழ்ச்சியைத் தரும் சிறிய விஷயங்களை அனுபவிக்க மறந்துவிடுகிறோம்.

Indian Cricketer Rishabh Pant About his recovery after accident

Images are subject to © copyright to their respective owners.

குறிப்பாக எனது விபத்துக்குப் பிறகு, ஒவ்வொரு நாளும் பல் துலக்க முடிவதுடன் சூரிய வெளிச்சத்தில் உட்கார்ந்திருப்பது போன்றவற்றிலும் நான் மகிழ்ச்சியைக் காண்கிறேன். நம்முடைய இலக்குகளை அடைய முயற்சிக்கும் போது, ​​வாழ்க்கையில் வழக்கமான விஷயங்களை நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டது போல் தெரிகிறது. எனது மிகப்பெரிய உணர்தல் மற்றும் செய்தி என்னவென்றால், ஒவ்வொரு நாளும் ஆசீர்வதிக்கப்படுவதை உணருவதும் கூட ஒரு ஆசீர்வாதமாகும். என்னுடைய விபத்திற்கு பிறகு நான் உணர்ந்துகொண்ட விஷயமாகும். வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் ரசிக்க கற்றுக்கொண்டேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

Also Read | கிரிக்கெட் பிதாமகன் சச்சினுக்கு புதிய கவுரவம்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. முழு விபரம்..!

CRICKET, INDIAN CRICKETER, RISHABH PANT

மற்ற செய்திகள்