"கனவுத் திட்டம்".. ஊர் மக்களோடு சேர்ந்து கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் கிரிக்கெட் வீரர் நடராஜன்.. அவரே வெளியிட்ட வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் தனது சொந்த கிராமத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் மைய புல் தரை டர்ஃப் பிட்ச் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

"கனவுத் திட்டம்".. ஊர் மக்களோடு சேர்ந்து கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் கிரிக்கெட் வீரர் நடராஜன்.. அவரே வெளியிட்ட வைரல் வீடியோ!

Also Read | வங்கிக்கு அடியில் இருந்த ரகசிய சுரங்கம்?.. விசாரிக்க வந்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!.. திடுக்கிடும் பின்னணி!!

நடராஜன் தன் சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் தனது பெயரில் ஒரு கிரிக்கெட் மைதானத்தை சில மாதங்களுக்கு முன் திறந்தார்.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம்பிடித்த நடராஜன், தனது  யாக்கர் பந்துவீச்சால்  பேட்ஸ்மேன்களை திணறடித்தார். இதனால், கடந்த 2020-21  ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் நடராஜன் நெட் பவுலராக இடம்பிடித்தார்.

Indian cricketer natarajan Instagram Post about His dream project

பிரதான வீரர்களின் காயத்தால் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நடராஜன் அறிமுகமானார்.

2020 - 2021ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த மூன்று வகையான (டி20, ஒருநாள், டெஸ்ட்) போட்டிகளிலும் அறிமுகமான நடராஜன் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்றார்.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடிந்த பிறகு முழங்கால் காயம் காரணமாக 2021 ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த நடராஜன், கடந்த ஐபிஎல் தொடரில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து வருடம் நடக்கும் ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணிக்கு விளையாட உள்ளார்.

Indian cricketer natarajan Instagram Post about His dream project

இந்நிலையில் தற்போது நடராஜன் தனது கிராமத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் புல் தரை பிட்ச அமைக்கும் பணிகளில் கிராமத்தினருடன் சேர்ந்து ஈடுபட்டு வருகிறார். களிமண் (கிளே) பிட்சாக இருந்ததை புல் தரை (டர்ஃப்) பிட்சாக மாற்ற வேண்டும் என நடராஜன் ஆசைப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஊர் மக்களோடு சேர்ந்து தனது கனவான கிரிக்கெட் அகாடமிக்கு ஏற்றவாறு இந்த மைதானத்தை நடராஜன் உருவாக்கி வருகின்றார். இது தொடர்பான வீடியோவை நடராஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Also Read | "நான் நம்புற மனுஷன கண்டுபுடிச்சுட்டேன்".. தன்னை விட 13 வயது குறைவான நபரை திருமணம் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரரின் முன்னாள் மனைவி!!

INDIAN CRICKETER, NATARAJAN, NATARAJAN INSTAGRAM POST

மற்ற செய்திகள்