"'17' வருஷம் கழிச்சு இப்டி நடந்துருக்கு..." 'ஆஸ்திரேலியா'வுக்கு எதிரான 'தோல்வி'யால் 'இந்திய' அணி செய்த மோசமான 'சாதனை'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

"'17' வருஷம் கழிச்சு இப்டி நடந்துருக்கு..." 'ஆஸ்திரேலியா'வுக்கு எதிரான 'தோல்வி'யால் 'இந்திய' அணி செய்த மோசமான 'சாதனை'!!!

முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி, 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்திருந்தது. பின்ச், ஸ்மித் ஆகியோர் சதமடித்து அசத்தியிருந்தனர். தொடக்க ஆட்டக்காரர் வார்னரும் 69 ரன்கள் எடுத்திருந்தார். இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, ஆரம்பத்தில் சிறப்பாக ஆடினாலும், இடையே விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. பாண்டியா, தவான் ஆகியோர் மட்டுமே சிறப்பாக ஆடியிருந்த நிலையில், மிடில் வரிசை தடுமாற்றம் கண்டது.

இதனால் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அடித்த அதிகபட்ச ஸ்கோர் ஆகவும் இது பதிவானது. இந்த போட்டியில் கோலியின் செயல்பாடு கடுமையான விமர்சனத்துக்குள் ஆக்கப்பட்டது. சைனியை ஆடும் லெவனில் இறக்கியது, கோலி தனது பேட்டிங்கில் சொதப்பியது, ஃபீல்டிங் சமயத்தில் செய்த தவறுகள் ஆகியவை அடங்கும்.

அது மட்டுமில்லாமல், 17 ஆண்டுகளுக்கு பிறகு மோசமான சாதனை ஒன்றையும் இந்திய கிரிக்கெட் அணி செய்துள்ளது. அதாவது கடைசியாக இந்திய அணி தொடர்ச்சியாக 6 சர்வதேச போட்டிகளில் 2003 ஆம் ஆண்டில் தோல்வி அடைந்திருந்தது. அதன் பிறகு, தற்போது தான் அது நிகழ்ந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக தோல்வி கண்டிருந்த நிலையில், ஆறாவது முறையாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இன்று தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்