Axar Patel Engagement : நீயும் நானும் சேர்ந்து செல்லும் நேரமே.. காதலியை கைப்பிடித்து.. இந்திய கிரிக்கெட் வீரர்.. செம்ம பெர்பாமென்ஸ்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஒருவருக்கு, நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Axar Patel Engagement : நீயும் நானும் சேர்ந்து செல்லும் நேரமே.. காதலியை கைப்பிடித்து.. இந்திய கிரிக்கெட் வீரர்.. செம்ம பெர்பாமென்ஸ்!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே, டெஸ்ட் தொடர் முடிவடைந்ததை அடுத்து, தற்போது ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதன் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

கட்டாயத்தில் இந்திய அணி

முன்னதாக, முதல் போட்டியில், இந்திய அணி தோல்வி அடைந்ததன் பின்னால், ராகுலின் கேப்டன்சி உள்ளிட்ட பல நிகழ்வுகள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதனால், தங்கள் மீதான விமர்சனங்களை களைத்து எரிந்து விட்டு, இன்று வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி ஆடி வருகிறது.

Indian cricket player axar patel engaged with his girlfriend

அசத்தல் சர்ப்ரைஸ்

இதனிடையே, காயம் காரணமாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில், இடம்பெறாமல் போன இந்திய வீரர் அக்சர் படேல், தன்னுடைய பிறந்தநாள் தினத்தில் அனைவருக்கும் அசத்தல் சர்ப்ரைஸ் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

Indian cricket player axar patel engaged with his girlfriend

லிஸ்ட்ல இடம்பிடித்த 3 இந்திய வீரர்கள்.. ஆனா ‘கோலி’ பெயர் மிஸ்ஸிங்.. ரசிகர்களுக்கு ‘ஷாக்’ கொடுத்த ஐசிசி..!

காதலிக்கு Propose

நேற்று தனது 28 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார் அக்சர் படேல். இதற்கு மத்தியில், தன்னுடைய காதலி மேகாவுடன் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை, அவரது நண்பரும், குஜராத் கிரிக்கெட் அணியில் அக்சர் படேலுடன் இணைந்து ஆடிய சின்தான் கஜா என்பவர், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த புகைப்படத்தில், அக்சர் படேல் தன்னுடைய காதலியிடம் காதல் பிரபோஸ் செய்கிறார்.

Indian cricket player axar patel engaged with his girlfriend

மனமுறுகிய அக்சர் படேல்

இதனைத் தொடர்ந்து, தன்னுடைய நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்களை அக்சர் படேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பகிர்ந்துள்ளார். 'நமது வாழ்க்கையின் புதிய தொடக்கம். வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருப்போம். முடிவற்ற காலம் வரை உன்னை காதலிப்பேன்' என மனமுருகி குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து

தன்னுடைய பிறந்தநாள் தினத்திலேயே, காதலியுடன் நிச்சயம் செய்து கொண்ட அக்சர் படேலுக்கு, ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே போல, இந்திய அணி வீரர்களான ரிஷப் பண்ட், சாஹல் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Indian cricket player axar patel engaged with his girlfriend

மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி.. வெளியான போட்டி அட்டவணை! எந்த தேதி - கிரவுண்ட் தெரியுமா?

தென்னாப்பிரிக்க தொடருக்கு பிறகு, இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக கிரிக்கெட் போட்டிகளை ஆடவுள்ளது. இந்த தொடரிலும், அக்சர் படேல் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிகிறது.

INDIAN CRICKET PLAYER, AXAR PATEL ENGAGED WITH HIS GIRLFRIEND, இந்திய கிரிக்கெட் வீரர், அக்சர் படேல்

மற்ற செய்திகள்