இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு… முக்கிய வீரருக்கு கொரோனா தொற்று

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு விரைவில் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.

இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு… முக்கிய வீரருக்கு கொரோனா தொற்று

இங்கிலாந்து சுற்றுப்பயணம்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி முதலில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதற்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் தற்போது விளையாடி வருகின்றன. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா

தற்போது இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை நடத்திய சோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Indian captain Rohith Sharma tested positive for covid 19

கடைசி டெஸ்டுக்கு முன்பாக இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஜூலை 5ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான பர்மிங்காம் டெஸ்டில் இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்ப்பட்டுள்ளது.

விராட் கோலி

முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் தொற்று ஏற்பட்டு அவர் குணமானதாக செய்திகள் வெளியாகின. கோலி, தனது மனைவி அனுஷ்கா மற்றும் மகள் வாமிகாவுடன் மாலத்தீவு சுற்றுலாவுக்கு பின் இந்தியா திரும்பிய பிறகு, லேசான அறிகுறிகளுடன், கோவிட்-19 தொற்று விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் தொற்று லண்டனை அடைந்த பிறகு பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நேரத்தில் அவர் இந்த தொற்றுநோயிலிருந்து மீண்டு முழுமையான உடற்தகுதியுடன் விளையாட தயாராக உள்ளார் என சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அதுபோலவே அவர் பயிற்சி ஆட்டத்திலும் விளையாடினார்.

 

அஸ்வின்

முன்னதாக இந்த சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும், இந்த சுற்றுப்பயணத்திற்கு செல்வதற்கு முன்பு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அஸ்வின் இங்கிலாந்து செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து வீரர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்படுவது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

Indian captain Rohith Sharma tested positive for covid 19

ROHIT SHARMA, INDIA REAM, COVID 19, VIRAT KOHLI

மற்ற செய்திகள்