விராட் கோலிக்கு ICC கொடுத்த அங்கீகாரம்.. கொண்டாடித்தீர்க்கும் ரசிகர்கள்.. இதுதான் விஷயமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலிக்கு புதிய அங்கீகாரத்தை அளித்திருக்கிறது சர்வதேச கிரிக்கெட் வாரியமான ICC. இதனால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Also Read | கோவை TO கேரளா.. சைக்கிள்ல போய் தாலி கட்டிய மாப்பிள்ளை.. அவர் சொன்ன காரணத்தை கேட்டு அசந்துபோன உறவினர்கள்..!
அந்த போட்டி கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றுதான் எல்லாரும் நினைத்தார்கள். 31 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தது இந்தியா. மெல்போர்ன் மைதானத்தில் திரண்டிருந்த இந்திய ரசிகர்களின் உதடுகள் ஒரேயொரு பெயரை மட்டுமே உச்சரித்துக்கொண்டிருந்தன. அந்தப் பெயர் விராட் கோலி. கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை எந்தவொரு கிரிக்கெட் ரசிகராலும் அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது.
ஒருபக்கம் விக்கெட்கள் சரிந்துகொண்டிருக்க, நிதானமாகவே இன்னிங்க்ஸை துவங்கினார் கோலி. தேவைப்படும் ரன்கள் அதிகம் இருந்தாலும், கோலி களத்தில் இருந்ததால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் தான் காத்திருந்தனர். அப்போதுதான் ஹாரிஸ் ராஃப் ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார் விராட். சோர்ந்திருந்த ரசிகர்கள் உற்சாகமானார்கள். அந்த த்ரில் வெற்றிக்கு காரணமான கோலியை அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரராக தேர்ந்தெடுத்துள்ளது சர்வதேச கிரிக்கெட் வாரியம். மேலும், பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் விராட்டின் இன்னிங்ஸ் குறித்தும் வெகுவாக பாராட்டியிருக்கிறது ICC.
ICC-ன் சமீபத்திய வாக்கெடுப்பின்படி கோலி அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விருது வென்றது குறித்து பேசிய கோலி,"அக்டோபர் மாதத்திற்கான ICC-ன் ஆண்களுக்கான சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது எனக்குக் கிடைத்த பெருமை. உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மற்றும் குழுவால் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எனக்கு மேலும் சிறப்பானதாக அமைந்திருக்கிறது. இம்மாதத்தில் சிறப்பாகச் செயல்பட்ட மற்ற நாமினேட்களுக்கும், எனக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் எனது சக வீரர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்றார். நெதர்லாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளுடான போட்டியிலும் விராட் கோலி அரை சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு டி 20 உலக கோப்பை தொடரில் குரூப் 1 இல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 வில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. வரும் நவம்பர் 10 ஆம் தேதி நடைபெற இருக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை சந்திக்க இருக்கிறது. இப்போட்டி அடிலெய்டில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Also Read | AaronCarter : பாத் டப்பில் சடலமாக கிடந்த பிரபல அமெரிக்க பாடகர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. முழு விபரம்..!
மற்ற செய்திகள்