"'இந்தியா'வே கொண்டாடுன அந்த ஒரு 'சம்பவம்' தான்.. என்னுடைய வாழ்க்கையையே மாத்துச்சு..." 'ரகசியம்' உடைத்த ‘இளம்’ வீரர்! டிரெண்டாக்கி கொண்டாடும் ரசிகர்கள்...!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் பங்கேற்கவுள்ளது.

"'இந்தியா'வே கொண்டாடுன அந்த ஒரு 'சம்பவம்' தான்.. என்னுடைய வாழ்க்கையையே மாத்துச்சு..." 'ரகசியம்' உடைத்த ‘இளம்’ வீரர்! டிரெண்டாக்கி கொண்டாடும் ரசிகர்கள்...!!

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்த போட்டியில் மோதவுள்ள இந்திய அணியின் வீரர்களின் பட்டியலை சில தினங்களுக்கு முன் பிசிசிஐ வெளியிட்டிருந்தது. 20 வீரர்களை இதற்காக தேர்வு செய்துள்ள நிலையில், மேலும் கூடுதல் வீரர்களாக 4 பேரையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்சான் நக்வஸ்வாலா (Arzan Nagwaswalla), கூடுதல் வீரர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ளார். முதல் தர போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட அர்சான், சமீபத்தில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே தொடரிலும், மிக அற்புதமாக பந்து வீசியிருந்தார்.

அது மட்டுமில்லாமல், மும்பை இந்தியன்ஸ் அணியின் நெட் பவுலராகவும் இந்த சீசனில் அர்சான் இருந்துள்ளார். அத்துடன் தற்போது, இந்திய அணியின் முக்கியமான போட்டிக்காக, கூடுதல் வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார் அர்சான் நக்வஸ்வாலா.

இதுகுறித்து பேசிய அர்சான், 'மும்பை அணியில் இருந்த போது, ரோஹித் ஷர்மா மற்றும் ஜாகீர்கான் ஆகியோருடன் அதிகமாக பேசியுள்ளேன். ஆனால், கோலியை இதுவரை நான் நேரில் சந்தித்தில்லை. அவரை சந்தித்து பேசுவதில் ஆவலுடன் உள்ளேன்.

இந்திய அணியில் நான் தேர்வானதும், மிகுந்த ஆச்சரியமடைந்தேன். இங்கிலாந்திலுள்ள பிட்ச் அனைத்தும், என்னைப் போன்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தகுந்த நிலையில் இருக்கும். இதனால், இங்கிலாந்து சென்று பங்கேற்கவுள்ளத்தில் மிகவும் ஆவலாக உள்ளேன்' என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, தனது கிரிக்கெட் வாழ்க்கை தொடங்க காரணமாக அமைந்தது பற்றிப் பேசிய அர்சான், '2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதை பார்த்த போது தான், இந்திய கிரிக்கெட் அணிக்காக நானும் ஆட வேண்டும் என்ற ஆசையை எனக்குள் தூண்டியது' என கூறினார்.

மற்ற செய்திகள்