‘அவர் மீண்டும் வலிமையுடன் ஃபார்முக்கு வருவார்..’ பிரபல வீரர் குறித்து விராட் கோலி நம்பிக்கை..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பை முடிவடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

‘அவர் மீண்டும் வலிமையுடன் ஃபார்முக்கு வருவார்..’ பிரபல வீரர் குறித்து விராட் கோலி நம்பிக்கை..

உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு குறைந்த ஓவர் போட்டிகளுக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியான நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் விராட் கோலியே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு ரோஹித் ஷர்மா துணைக் கேப்டனாகவும், டெஸ்ட் போட்டிக்கு அஜிங்க்ய ரஹானே துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அஜிங்க்ய ரஹானேவின் டெஸ்ட் சராசரி 40ஆக இருந்தாலும் அவர் கடந்த சில போட்டிகளாக ரன் எடுக்க சிரமப்பட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஜிங்க்ய ரஹானே பற்றிப் பேசியுள்ள விராட் கோலி, “ஜிங்க்ஸ் (ரஹானே) ஒரு சிறந்த வீரர். அணியில் சீராக விளையாடக் கூடிய வீரர்களில் ஒருவர். அவர் இந்த ஆட்டத்தை சரியாக புரிந்துகொள்ளக் கூடியவர்,  விலைமதிப்பற்ற ஃபீல்டர். அவர் டெஸ்ட் போட்டியின்போது ஃபீல்டிங்கில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை எல்லோருமே பார்த்துள்ளோம்.

அழுத்தம் தரக்கூடிய சூழலிலும் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார். இந்த வயதிலேயே அவருடைய டெஸ்ட் சராசரி 40 ஆக உள்ளது. அவரைப் போன்ற ஒருவரிடம் அவசரப்படத் தேவையில்லை. அவர் அணிக்கான வேலையை அழுத்தத்திலும் செய்துள்ளார். இது எல்லா வீரர்களுக்கும் வரக் கூடிய ஒன்றுதான். ஆனால் அவர் மீண்டும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவார், அந்த அளவுக்கு அவர் மிகச் சிறந்த வீரர்” எனக் கூறியுள்ளார்.

ICCWORLDCUP2019, TEAMINDIA, INDVSWI, VIRATKOHLI, AJINKYARAHANE, ROHITSHARMA