அபார ஆட்டம்... நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இந்தியா..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா- நியூசிலாந்து மோதிய 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று கைப்பற்றியது.
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியை ஒரு நாள் முன்னதாகவே வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது. இந்திய அணியின் சார்பில் 4-ம் நாள் ஆட்டத்தில் மட்டும் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உள்ளார் ஜெயந்த் யாதவ். இந்த 2-வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்தது. இதில் இந்தியா- நியூசிலாந்து இடையேயான போட்டி ‘ட்ரா’ ஆனது.
2-வது போட்டியில் இரண்டாவதாக ஆடத்தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு இந்திய அணி 540 ரன்களை டார்கெட் ஆக கொடுத்திருந்தது. ஆனால், கடும் விக்கெட் வீழ்ச்சிகளால் நியூசிலாந்து அணி 167 ரன்களுக்கே 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இருந்தது. இந்திய அணி 2-வது போட்டியின் 3-ம் நாள் ஆட்டத்தின் போதே வெற்றியை நெருங்கிவிட்டு இருந்தது. இதன்ச்ச்ல், 4-ம் நாளிலேயே வெற்றிக் கோப்பையைத் தனதாக்கிக் கொண்டுள்ளது இந்திய அணி.
மொத்தத்தில் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வென்றது. கடைசி விக்கெட் ஆன நியூசிலாந்தின் ஹென்ரி நிக்கோலஸை இந்தியாவின் வ்ரித்திமான் சாஹா ஸ்டம்ப்-அவுட் செய்ய டெஸ்ட் தொடர் 1-0 என நிறைவு செய்யப்பட்டது.
4-ம் இன்னிங்ஸ் ஆட்டத்தில் இந்திய அணியின் சார்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஜெயந்த் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்திய பந்துவீச்சாளர்களால் 4- ம் நாள் ஆட்டம் வெறும் 45 நிமிடங்களிலேயே முடிந்துவிட்டது.
மற்ற செய்திகள்