Video: 'நோட்ஸ்' எடுத்துக்கப்பா.. நான் 'அடிச்ச' சிக்ஸ.. ருத்ரதாண்டவம் 'ஆடி' வெறுப்பேற்றிய கோலி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 207 ரன்களை குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் ரோஹித் சர்மா 8 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதையடுத்து இறங்கிய விராட் கோலி, கே.எல்.ராகுலுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ராகுல் 62 ரன்களில் வெளியேற, இதையடுத்து இறங்கிய ரிஷப் பண்ட் 18 ரன்னிலும், ஷ்ரேயாஸ் ஐயர் 4 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.
Notes எடுத்துக்கோப்பா, நான் வாங்கின sixesஅ 😍😍😍😎😎💪💪💪 pic.twitter.com/9x7dTcR5qC
— குழந்தை Talks (@maanniiiiiii) December 6, 2019
எனினும் மறுமுனையில் நங்கூரம் போல நிலைத்து நின்ற கோலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். 50 பந்துகளை சந்தித்த கோலி 6 சிக்ஸர், 6 போர்களுடன் 94* ரன்களை குவித்தார். டி20 போட்டியில் விராட்டின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கேப்டனின் சூறாவளி ஆட்டத்தால் இந்திய அணி 18.4 ஓவர்களில் வெற்றியை ருசித்தது. அதுமட்டுமின்றி கடைசிப்பந்தில் சிக்ஸர் அடித்த கோலி கையில் அணிந்துள்ள கிளவுஸை கழற்றிவிட்டு, நோட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள் என வெஸ்ட் இண்டீஸ் பவுலரை வெறுப்பேற்றினார்.
மேலும் தன்னுடைய ஜெர்ஸி காலரை தூக்கிவிட்டும் இந்த வெற்றியை கோலி கொண்டாடினார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன. இந்த வெற்றி மூலம் இந்திய அணி டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்த கிங் கோலி மேன் ஆப் தி மேட்ச் வென்றார்.