"'ஃபைனல்ஸ்' ஆடுறது எல்லாம் சரி.. ஆனா, இந்த நெனப்புல மட்டும் ஆடுனீங்க.. அப்புறம் நீங்க தான் வருத்தப்படுவீங்க.." 'இந்திய' அணியை எச்சரித்த 'முன்னாள்' வீரர்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

"'ஃபைனல்ஸ்' ஆடுறது எல்லாம் சரி.. ஆனா, இந்த நெனப்புல மட்டும் ஆடுனீங்க.. அப்புறம் நீங்க தான் வருத்தப்படுவீங்க.." 'இந்திய' அணியை எச்சரித்த 'முன்னாள்' வீரர்!!

இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில், வரும் ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை இந்த போட்டி நடைபெறவுள்ளது. இரு அணிகளும் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சம பலத்துடன் திகழ்வதால், முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்றி அசத்த, இரு அணிகளும் அதிக முனைப்புடன் உள்ளது.

பல கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் நிபுணர்கள், இரு அணிகளிலுமுள்ள பலம் குறித்தும், எந்த அணி வெற்றி பெறும் என்பது பற்றியும், தங்களது கணிப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் (Ajit Agarkar), டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி பற்றி, சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

'பலரும் இந்திய அணி வெற்றி பெறும் என கூறி வருகின்றனர். அதற்காக, நியூசிலாந்து அணியை ஒருபோதும் இந்திய அணி வீரர்கள் குறைத்து மதிப்பிடக் கூடாது. கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற, அனைத்து ஐசிசி தொடர்களிலும், இறுதி போட்டி, அரை இறுதி அல்லது காலிறுதி என ஏதேனும் ஒரு சுற்று வரை, நியூசிலாந்து அணி முன்னேறி அசத்தி வருகிறது. இது தான், அவர்கள் தொடர்ச்சியாக சிறந்த ஃபார்மில் இருப்பதற்கான சான்றாகும்.

கடந்த ஆண்டு, இந்திய அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, டி 20 தொடர்களில் மட்டும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்திருந்தது.

இங்கிலாந்து மைதானங்களின் கண்டிஷன்களும், நியூசிலாந்து மைதானங்களைப் போல தான் இருக்கும். எனவே, இந்த போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்த வேண்டுமென்றால், இந்திய அணி அதிக திட்டங்களைத் தீட்டி, மிகச்  சிறப்பாக ஆட வேண்டும்' என அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்